தொடர்கள்
பொது
ஊட்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல் வைத்த வருவாய் துறை - ஸ்வேதா அப்புதாஸ் .

மலைகளின் அரசியின் மிக அழகான பசுமையான இடம் ஊட்டி ரேஸ் கோர்ஸ் .

20240611201954823.jpg

கடந்த 150 வருடமாக வரலாற்று சிறப்பு மிக்க குதிரை பந்தயம் கோடை காலமான ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வருவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஒன்று .

ஊட்டியில் குதிரை பந்தயம் துவங்கியதே சுவாரசியமான தகவல் .

20240611202028268.jpg

1846 ஆம் ஆண்டு தற்போதைய காந்தல் முக்கோண மைதானத்தில் தான் முதலில் hurdle race துவக்கப்பட்டது .பின்னர் வென்லாக் டவ்னில் steeple chase ரேஸ் நடக்க பின் 1882 ஆம் ஆண்டு ஜிம்கானா கிளப் துவக்கப்பட்டு ரேஸ் துவங்கியது .

1894 ஆம் வருடம் முறையான குதிரை ரேஸ் தற்போதைய ரேஸ் கோர்ஸானா ஹோபார்ட் பார்க்கில் டர்ப் கிளப் சட்ட திட்டங்களின் படி துவங்கியது !.

20240611203231226.jpg

ஊட்டி ரேஸ் கோர்ஸ் இந்தியாவிலே உயரமான மலை பிரதேசத்தில் அமைந்துள்ள அழகான ரேஸ் கோர்ஸ் என்ற பெருமையை கொண்டது .

நாமும் கூட இந்த குதிரை பந்தயத்தை ரசித்த காலம் உண்டு நீலகிரி மலை ரயிலில் குதிரைகள் வந்து இறங்கும் அழகோ அழகு தான் .

20240611203304687.jpg

சாம்பியன் குதிரைகள் லெஜெண்ட்ரீ ஓன் ஒபினியன் ,கிராண்ட் பரேட் , விங்ட் ஒண்டர் ,மை ஒபினியன் ,யங் ராஜ்புட் ,பர்த்டே கேர்ள் ,சய்தனிய ரதம் நளினி , அலவன்ஸ் கிளைவ் என்று குதிரைகளின் நினைவு மறக்கமுடியாது .

அதே போல பயிற்ச்சியாளர்களான ஆரிஸ் டேவிட் ,சாம் ஹில் ,டேவிட் ஹில் ,ஜெ .ட்ரைலர் ,தாம்சன் ,பாலி ,என்றும் ஜாக்கிகளான போர்டயஸ் ,ஸ்விம்பரன்,

20240611203341775.jpg

டிக்சன் ,ஷங்கர் ,ஜெகதீஷ் ,மார்ஷல் , கார்னெர் ,பேர்டு ,தஸ்தகிர் .என்ற ஜாக்கிகளின் ரைட் சூப்பர் நினைவுகள் .

இப்படி பட்ட குதிரை பந்தயத்தை 1974 ஆம் வருடம் தமிழக அரசு ரத்து செய்தது .

பின்னர் நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் துவங்கியது ரேஸ் .

1986 ஆம் வருடம் மே மாதம் ஊட்டி ரேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அன்றைய அ இ அ தி மு க அரசு குதிரை ரேசை தடை செய்தது .

20240611203428985.jpg

மீண்டும் நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் ரேஸ் துவங்கி 1988 ஆம் வருடம் தி மு க அரசு குதிரை பந்தயத்தை அரசு துறையாக நடத்தியது பின் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் 1998 முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் எடுத்து நடத்தி வருகிறது .

ஊட்டி நகரில் சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் 2019 ஆம் ஆண்டு அன்றைய கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா 2 ஏக்கர் நிலத்தை கையக படுத்த அதற்கு ஒத்து வராத மெட்ராஸ் ரேஸ் கிளப் நீதி மன்றத்திடம் முறையிட மாவட்ட நிர்வாகம் ரேஸ் கோர்சை கோத்தகிரிக்கு மாற்ற இடத்தை தேர்வு செய்து கொடுக்க அறிவுரை கூற பின் வேறு வழியில்லாமல் இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுத்தது ரேஸ் கிளப் .

தற்போது தற்காலிக ஊட்டி மார்கெட்டாக உள்ளது இந்த பகுதி

குதிரைகள் சீறி பாய்ந்து ஓடிவரும் அழகான காட்சியை காண ஆயிரம் கண்கள் அதில் தங்களின் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம் .

புதிய பறவை படப்பிடிப்பின் போது நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் ஊட்டி ரேசை ரசித்து முதலமைச்சர் கோப்பையை வெற்றி பெற்றவர்களுக்கு கொடுத்தார் . உடன் சரோஜாதேவி வந்திருந்தாராம் .

எம் .என் .நம்பியார் ரெகுலர் விசிட்டர் .

20240611203523962.jpg

புகழ் பெற்ற ஊட்டி ரேஸ் கோர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது கடந்த வெள்ளிக்கிழமை என்பது அதிர்ச்சியான நியூஸ் !.

20240611210500379.jpg

மெட்ராஸ் ரேஸ் கிளப் 1978 முதல் ரேசை நடத்தி வருகிறது .

கடந்த 2001 முதல் வருவாய் துறைக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கட்ட மறந்து விட்டது .52.34 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்ற கற்பனையில் காலத்தை தள்ளி வந்தது .

மெட்ராஸ் ரேஸ் கிளப் உறுப்பினர்கள் பாவப்பட்டவர்கள் அல்ல மிகவும் பந்தாவான கோடிஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

குத்தகை பணமான 822 கோடி நிலுவையில் இருக்க வருவாய் துறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் கொடுக்கவில்லை இந்த டிப் டாப் குதிரை பிரமுகர்கள் .

2019 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம் மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை பணத்தை செலுத்துவதில்லை என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர.....

இந்த குத்தகை தொகை உயர்வை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையிடு வழக்கு தொடர விசாரணை முடிவில் நீதி மன்றம் நிலுவையில் உள்ள குத்தகை பாக்கியை உடனே ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் குதிரை பந்தய மைதானத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து ரேஸ் கிளப் மௌனம் காக்க ஊட்டி ஆர் டி ஒ மகாராஜ் தாசில்தார் சரவணகுமார் குழு வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டி ரேஸ் கோர்ஸை சீல் செய்து கையக படுத்தி சுற்றுசூழல் பூங்கா அமைக்க தோட்டக்கலை துறையிடம் ஒப்படைத்தனர் .

ஒரு அழகான இயற்கையான ரேஸ் கோர்சை தங்களின் வறட்டு கௌரவத்தால் இழந்துள்ளனர் மெட்ராஸ் ரேஸ் கிளப் உறுப்பினர்கள் .

முன்னாள் நகர மன்ற துணை தலைவர் டி .சி .பாலசுப்ரமணியம் கூறும் போது ,

20240611203617329.jpg

"வரலாற்று சிறப்பு மிக்க குதிரை பந்தைய மைதானம் மூடப்பட்டு விட்டது வருத்தமான விஷயம் .அழகான ரேஸ் கோர்சில் குதிரைகள் பாய்ந்து வருவதை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் ஏராளம் .

ஊட்டியின் மைய பகுதியில் உள்ள பசுமையான புல் மைதானத்தை பாதுகாக்க வேண்டும் .எந்த ஒரு கட்டிடமும் கட்ட கூடாது .

நீரூற்று அழகான பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும் .

ரேஸ் நிறுத்த பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களின் வேலை பறிபோனது பரிதாபத்துக்குரியது .

புக்கிகளிடம் வேலை செய்தவர்களை நூறுபேருக்கு மேல் .

மெட்ராஸ் ரேஸ் கிளப் இவ்வளுவு பெரிய தொகையை வருவாய் துறைக்கு செலுத்தாமல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது .

20240611203714694.jpg

150 வருட ரேஸ் கோர்ஸ் கனவாகி போன ஒன்றாக மாறிவிட்டது வேதனையான ஒன்று .

இந்த குதிரை பந்தய மைதானம் இன்னும் அழகாக மாறவேண்டும் ."

மூத்த பத்திரிகையாளர் ஆர் .ஏ .தாஸ் நம்மிடம் பேசினார் ,

" நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ள தாக்குகளில் உள்ள ஒரு மைதானம் .

ஜான் சல்லிவன் இந்த விஸ்தாரமான பள்ளத்தாக்கு மூன்று பக்கமும் மலைகள் அதிலிருந்து ஊர்ந்து வரும் வெள்ளி அருவிகளை பார்த்து பிரமித்து போய் இங்கு ஒரு தலைமையிடம் உருவாக முடிவெடுத்தார் .

20240611203825290.jpg

1825 ஆம் ஆண்டு ஊட்டி ஏரியை உருவாக்கி தற்போதைய மார்க்கெட் வரை ஏரி இருந்தது .அதை மண்ணால் மூடி ஹோபார்ட் பார்க் உருவாக்கி கிரிக்கெட் , போலோ விளையாட்டு மைதானமாகியதை .பின்னர் ஜிம்கானா கிளப்

குதிரை பந்தயத்தை துவக்கியது .

அனைத்து பணிகளையும் மிலிட்டரி பயனீர் துறை செய்து வந்தது .

1887 யில் குதிரை பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது .

1978 ஆம் வருடம் மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசு நிலத்திற்கான குத்தகை தொகையை செலுத்தி வந்து 2001 ஆம் ஆண்டில் இருந்து அந்த தொகையை கட்டாதது தவறு தானே !.

தற்போது தோட்டக்கலை துறையிடம் ஒப்படைத்து யூகோ பார்க் உருவாக திட்டம் குட்டையான மரங்கள் மலர் பூக்கும் செடி கொடிகள் பசுமை மாறாமல் அமைக்க வேண்டும் சதுப்பு நிலத்திற்கு எந்த பாதிப்பும் வர கூடாது .

எந்த ஒரு கட்டிடமும் கட்டாயம் வர கூடாது .

குத்தகை தொகையை ரேஸ் கிளப் செலுத்தினால் மீண்டும் அழகான குதிரை பந்தயம் தொடரலாம் " என்று கூறுகிறார் .

சுற்று சூழல் ஆர்வலர் சிவதாஸ் கூறும் போது ,

20240611203905209.jpg

" ஊட்டி ரேஸ் கோர்ஸ் சீல் என்பது வருத்தமான ஒன்று .150 வருட பாரம்பரிய வீரமான விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது .

இந்த குதிரை பந்தய சூதாட்டத்தால் உள்ளூர் வாசிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர் .மனைவியின் தாலியை அடமானம் வைத்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் .

சுற்றுசூழல் ரீதியாக ரேஸ் கோர்ஸ் ஒரு சதுப்பு புல் மைதானம் .

அறிய இந்திய பறவைகளின் புகலிடம் .குருவிகள் கூடு கட்டி வசிக்கும் இடமும் கூட .

20240611203948515.jpg

ஓலை குடிசையில் இருந்த குதிரை இருப்பிடம் தற்போது கான்க்ரீட் கூடாரமாக உருவாகியுள்ளது .

இனி அது தொடரக்கூடாது .

தோட்டக்கலை துறையை நுறு சதவிகிதம் நம்பியுள்ளோம் இயற்கையான பெரிய புல் வெளியையும் சதுப்பு நிலத்தை பனி கொட்டும் பகுதியை பாதுகாக்க வேண்டும் ."

முன்னாள் தோட்டக்கலை இணைஇயக்குனர் முருகனை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20240611204025488.jpg

" ஊட்டி ரேஸ் கோர்ஸில் 1992 ஆம் ஆண்டு லீனா நாயர் கலெக்டராக இருந்த பொழுது 6.5 ஏக்கர் நிலத்தில் ஜப்பான் கார்டன் உருவாக்கினோம் அழகிய குளம் , சிறிய பாலங்கள் போன்சாய் மரங்கள் உருவாக்கி ஒப்படைத்தோம் அதை பராமரிக்க தவறவிட்டு மண் புல் மூடிவிட்டது .

அதை மீண்டும் தோண்டி எடுத்து பராமரிக்கலாம் .

20240611204053359.jpg

அதே போல அதிகமான பனி உருவாகி படரும் இடம் எந்த காரணத்தாலும் பாதிக்க கூடாது .

புல் வெளி இயற்கை மாறாமல் நான்கு பக்கமும் அழகான யூகோ பார்க் உருவாக்கலாம் " என்று கூறினார் .

ஊட்டி ரோஜா பூங்காவை உருவாக்கினவர் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது .

நீலகிரி ஆவன காப்பக இயக்குநர் கூறினார் ,

20240611204121776.jpg

" ரேஸ் கோர்சை சீல் செய்தது சரியானது அல்ல .இந்த பிரச்சனை அடிக்கடி வருவது அர்த்தமற்றது .சில வருடங்களுக்கு முன் அந்த இடத்தை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார்கள் .குத்தகை பணம் செலுத்தவில்லை என்று சீல் வைத்துள்ளனர் .ரேஸ் கிளப்பில் இரண்டு அரசு பிரதிநிதிகள் இருக்கும் பட்சச்தில் ஏன் பேசி முடிவு செய்ய கூடாது . தோட்டக்கலை துறையிடம் ஒப்படைத்தது என்பது நியாயமற்றது .

ரேஸ் இல்லாமல் சில விளையாட்டுகளுக்கு உபயோகப்படுத்தலாம் .

ஹார்ஸ் ரைடிங் ட்ரெயினிங் பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் .

நாட்டுப்புற விளையாட்டான கபடி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தலாம் .

இந்த சதுப்பு நிலத்தில் எந்த கட்டிடமும் வர கூடாது பனி கொட்டும் பகுதி பாதுகாக்க வேண்டும் " என்று கூறினார்

20240611204219230.jpg.மெட்ராஸ் ரேஸ் கிளப் சீல் வைத்தவுடன் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உச்ச நீதி மன்றம் 2019 ஆம் ஆண்டே குத்தகை காலம் முடிவடைந்துவிட்டது இனி ரேஸ் கோர்சில் ரேஸ் நடத்த முடியாது மாவட்ட நிர்வாகம் அந்த நிலத்தை கையகப்படுத்தியது சரியே என்று கூறி ரேஸ் கிளப் மனுவை நிராகரித்தது .

ஒரு காலத்தில் தேசிய அளவில் கால்பந்து போட்டி இந்த ரேஸ் கோர்சில் நடந்துள்ளது .

இந்த இயற்கையான பகுதி காப்பாற்ற பட வேண்டும் என்பது அனைவரின் ஆதங்கம் .