தொடர்கள்
ஆன்மீகம்
காட்சி பிழைகளோ - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240612120000797.jpeg

ஒரு முக்கியமான சந்தோஷமான அறிவிப்பின் மூலம் இந்த கட்டுரையை தொடங்குவது தான் உத்தமம்.

தமிழ் நாடக உலகம் மிகவும் உயிர்ப்புடனும், துடிப்புடனும் உற்சாகமாக இருக்கிறது. அதற்கு காரணம் அதன் உண்மையான ரசிகர்கள்.

ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு தொடங்கிய நாடகத்திற்கு அரங்கம் முழுவதும் நிரம்பி ஆனந்தமாய் ரசித்துக் கொண்டிருந்தனர். அதுவும் கருமேகங்கள் பயமுறுத்திய ஞாயிறு மாலை வேலை காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் வந்தார்கள். நாடகம் தொடங்கிய சில மணித்துளிகளில் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கியது. பலர் நனைந்தாலும் பரவாயில்லை என்று ஓடி வந்து அமர்ந்தது அவர்கள் தமிழக நாடகத்திற்கு கொடுத்த அங்கீகாரம், நம்பிக்கை.

அவர்களின் நம்பிக்கை துளி அளவும் குறையாமல் வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மூவரணி. ஆம் மூவர் அணி. பத்ரி , வத்சன், தக்ஷின் . மிகவும் அலட்டிக்காமல் தங்கள் எண்ணங்களுக்கு வர்ணம் தீட்டி தீனி போட்டுள்ளனர். கதை, நாடகமாக்கம், இசை . இவர்கள் உருவாக்கியது தான் " காட்சி பிழைகளோ " எனும் புதிய நாடகம். இதனை தயாரித்து நடித்ததும் ஒரு மூவர் கூட்டணி தான் . இருவர் சேர்ந்த மூவர் கூட்டணி. பாஸ்கர் மற்றும் லாவண்யா வேணுகோபாலின் "3" thRee நிறுவனம் தயாரிப்பில் இவர்கள் இருவரின் நடிப்பில் வத்சனின் இயக்கத்தில் மேடையேறியது காட்சி பிழைகளோ நாடகம்.

20240612120311285.jpeg

காட்சி பிழைகளோ காண தவறினால் மாபெரும் பிழை என்று நம்மை குற்ற உணர்ச்சிக்கு தூண்டும் அளவிற்கு மிக சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்கள். நாடகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை கானா தான் நாம் அங்கே சூழ்திருக்கிறோம். அதனால் நாடகத்தின் காட்சிகள் பற்றி எதுவும் இங்கே விளக்க போவதில்லை. ஒரு சில சிறப்பை மட்டும் பகிரலாம் என்று தோன்றுகிறது.

முக்கியமாக வசனங்கள். இந்த நாடகம் விஞ்ஞான போராட்டத்துக்கும் சிந்தாந்த போராட்டத்துக்கும் நடக்கும் ஒரு குடும்ப கதை. இதனை காட்சிகள் மூலமும், வசனம் மூலமும், இசையின் மூலமும் நடிப்பின் மூலமும் 90 நிமிடங்கள் நம்மையும் நம் மனதையும், நம் சிந்தையையும் கட்டி போட்டுள்ளார்கள்.

உதாரணத்துக்கு ஒரு வசனம் - விசில் பறந்தது.

"சாமி இல்லன்னு சொல்ற எல்லார் வீட்டிலேயும் கோயில் பூஜைன்னு ஒருத்தர் இருப்பார் "

பாஸ்கரும் சரி மற்ற அனைத்து நடிகர்களும் சரி தங்கள் பங்கினை செவ்வனே சிறப்பாக செய்துள்ளனர். பார்வையற்றவராக நடித்த லாவண்யா வேணுகோபாலை எப்படி பாராட்டலாம் என்று தோன்றவில்லை. தமிழ் நாடக உலகின் நடிப்பு ராட்சசி, அரக்கி என்று பாராட்ட மனமில்லை . நடிப்பு தேவதை என்றே பாராட்ட தோன்றுகிறது. வரும் அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணுகிறார்.

நாடகத்தை காண வந்த இயக்குனர் வசந்த் ஒரு படி மேலே போய் , மேடையின் மேலும் தான் I LOVE LAVANYA என்றார். இதுவரை இதுபோன்ற நடிப்பை சிறப்பான நாடகத்தை பார்த்ததில்லை என்றார். அவர் எண்ணம் நாடகம் பார்த்த அனைவருக்கும். தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

இவர்களது முந்தய படைப்பான பாயும் ஒளியும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் காட்சி பிழை பிழையில்லா காட்சி