தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2024061220321736.jpeg

போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள்.

புது கமிஷனர் வந்துட்டாராம் !!

தோல்வி பயத்தில் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அண்ணே நாம எதிர்க்கட்சியா இருக்கும் போது தேர்தலை புறக்கணித்து இருக்கோம் !!

விக்கிரவாண்டி தொகுதியில் சாராயம் குடித்த ஆறு பேருக்கு உடல் நலம் பாதிப்பு.

இப்ப என்ன பத்து லட்சம் ரெடி பண்ணனும் சொல்றீங்களா !!

புதிய காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்து செல்வபெருந்தகை.

பழைய அதிகாரி தான் இடம் தான் மாறி இருக்காங்க தலைவரே !!

எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் வெட்கப்படுவார்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வெட்கத்தை வைத்து என்ன பண்றது தலைவரே டெபாசிட் கிடைக்குமா ?

அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ஓபிஎஸ்.

ஆமாமா இப்பதான் நீங்க கட்சியில் இல்ல இல்ல !!

மத்திய அரசுடன் கர்நாடகா காங்கிரஸ் தேவை இன்றி மோதுகிறது மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி.

கூட்டணி அமைச்சராம்.

ஆந்திராவில் காங்கிரஸ் தலைமையில் வலுவான எதிர்க்கட்சி உருவாகும் தெலுங்கானா முதல்வர்.

அப்ப கூட முதல்வருக்கு ஆளுங்கட்சி உருவாகும் என்று சொல்ல முடியல !!

ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு அமலாக்கத்துறை மனு தாக்கல்.

அதுதான் அவசரப்பட்டு முதல்வரா பதவி ஏத்துக்கிட்டாரோ !!

கோவை நெல்லைக்கு புதிய மேயர்கள் இல்லை.

புதுசா ஒரு கோஷ்டி உருவாக வேணாம்னு நினைக்கிறாங்க போல தெரியுது !!

தமிழக காங்கிரஸ் தலைவர் குண்டர் சட்டத்தில் கைதானவர் அண்ணாமலை தகவல்.

இந்த விஷயம் ராகுல் காந்திக்கே தெரியுமே !!

தமிழகத்தில் மீண்டும் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் அமைச்சர் ரகுபதி.

சரி சரி சரி

10 கோடி போதை பொருள் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்.

போதையில்லா மாநிலம்ன்னு என்று சொன்னாங்க !!

விக்கிரவாண்டியில் 82.48% வாக்கு பதிவு.

செலவு ஜாஸ்தியா இருந்திருக்குமே !!

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ்.

உடனே போய் பிரதமர்கிட்ட சொல்லுங்க செஞ்சிடுவாரு.

சென்னையில் 6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு சென்னை காவல் ஆணையர்.

எல்லோரும் ஏதாவது கட்சி ஆபீஸ்ல தான் இருப்பாங்க தேடுவதற்கு சிரமப்பட வேண்டாம் !!

மூன்று மடங்கு வேகத்தில் செயல்படுவேன் பிரதமர் மோடி.

பிரதமருக்கு மூன்று தான் ராசி !!

வேலைவாய்ப்பை பறிப்பது மோடியின் வேலை மல்லிகார்ஜுன கார்கே.

காங்கிரஸ் வேலைவாய்ப்பு தானே தலைவர் சொல்றீங்க !!