தொடர்கள்
கதை
இனி எனக்கு  எல்லாமே அவள்தான் - மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240613151919866.jpeg

(இண்டர்வியூ இப்படி நெருக்கமா நடக்கலை. படம் வரையவன் கற்பனை இது. தப்பா நினைச்சுக்க வேண்டாம்)

அன்று மணி மாலை 7 இருக்கும். என்னோட ஃபோன் சிணுங்கியது. கூப்டவங்க ஒரு பொண்ணு. பேரு வந்தனாவாம். ’என்ன சொல்லுங்க’ வழிஞ்சது நான்.’ஏன் சார்ரொம்ப பிஸியோ?’ அடுத்த முனையில் கலாய்த்தது அவள். வேலைதான் கெடச்சுடுத்தே.கல்யாண சாப்பாடு போட வேண்டியதுதானே?’என்றாள். எனக்கு ஒன்றும்புரியவில்லை.பேசாமல் இருந்தேன்.

’அதான் ஏற்கெனவே பொண்ணு பார்த்தாச்சே’ என்றாள் அவள். மேலும்.நான் ’ம்’ என்று மொளனத்தால் பதில் சொன்னேன். இப்ப நெனவுக்கு வந்துடுத்து.போன வாரம் மாப்பிள்ளயா இந்த பொண்ணத்தான் பார்த்துட்டு வந்தேன்.

அந்த கொஞ்சல் டெலிபோனுக்கு பின்னால்......

என் பேரு பாஸ்கர்.வயசு 32. எம்.ஏ. முடிச்சிருக்கன். இன்னும் வேலையும் கிடைக்கல. கல்யாணமும் ஆகல.

இப்படி இருக்கச்ச போன வாரம் ஒரு பொண்ண பார்க்க அம்மா கம்பெல் பண்ணி கூட்டிட்டு போனாங்க. அவங்கதான் வந்தனா….. வீட்டுக்கு ஒரே பொண்ணு.எனக்குரொம்பவும் பிடிச்சுருந்தா.அவளுக்கும் என்ன பிடிச்சிருந்தது.அவங்க ஒரு கம்பெனியில எச்ஆர் போஸ்டல இருக்கறதா சொன்னாங்க. ‘வேலை கிடைச்சாதான் கல்யாணம்பண்ணிபேன்’ ன்னு உறுதியா சொல்லி தப்பிச்சுட்டேன்.

எனக்குதான் ரொம்பவும் வெட்கமா போயிடுத்து. பேசாம அவங்க பையன பார்க்கவந்துருக்கலாம். இதுல அந்த பொண்ணுகிட்ட என்னோட அம்மா என் பயோ டேட்டாவ கொடுத்து ’வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்க’ன்னு வேற சொல்லிட்டாங்க. எனக்கு மானமேபோயிடுத்து.இது நடந்து ஒரு மாசமாச்சு.

அந்த இண்டர்வியூ நாள் மறக்க முடியாதது.......

என்னோட 9 ஆவது இன்டர்வியூ.இண்டெர்வியூ பேனலில் மூன்று பெண்கள் உட்கார்ந்திருந்தாங்க.அதில் ஒருத்தங்க சிம்புளா,அழகா இருந்தாங்க.நான் இண்டெர்வுயுவ ஒழுங்கா பண்ண மாதிரிதான். அவங்கள ஏற்கெனவே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ‘எங்க?’ன்னு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல. இப்ப அது ஞாபகப்படுத்திண்டு இருந்தா கேக்குற கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்வேன்?.இவங்க ’இங்க இருக்கற வரைக்கும் என்னால சரியா பதில் சொல்ல முடியுமா?’ன்னு தெரியலேயே.

அவங்கள பார்ப்பதய கொஞ்ச நேரம் தவிர்த்தேன்.கேட்ட கேள்விக்கெல்லாம் ஏதோபதில சொன்னேன். ஆபீஸ் அன்றாட வேலைகளைப் பற்றி கேட்டாங்க. அதுல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் திருப்தியா தான் பதில் சொன்னேன் .

ஒரு வழியா இண்டெர்வியு முடிந்தது.’நீங்க வீட்டுக்கு போகலாம்’ன்னு சொன்னது அந்த அழகிதான்.’என்ன அவசரமோ, இன்னும் கொஞ்ச நேரம் இண்டர்வியு பண்ணுங்களேன்’ மனதுக்குள் நான் சொன்னது அவள் காதுக்குள் போகவில்லை.

அந்த மேடம்கிட்ட,’எங்கேயோ உங்கள பார்த்திருக்கிறேன்’னு சொல்லலாம்னு நெனச்சேன். அவங்க வேலை தர இடத்துல இருக்காங்க.நான் வேல கேட்டுவந்துருக்கேன்.ஏதாவது கேட்டுட்டா போஸ்கோவில போட்ருவாங்களோ? மனசில்லாமல் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தேன்.

ரெண்டு நாள் ஆச்சு. தபால் ஒன்னு வந்தது. பிரிச்சு பார்த்த எனக்கு அதிசயம்காத்திருந்தது. நான் இண்டர்வியூல செலக்ட் ஆகி பிளேஸ்மெண்ட்டாயி இருக்கேன். அம்மா கிட்ட சொன்னேன்.

அடுத்த மூகூர்தத்துல சிம்பிளா எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.என்னை இண்டர்வியுவல பாடாபடுத்திய வந்தனாதான் இப்போது என் மனைவி. அவள்தான் எனக்கு வேலையை வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

’வாங்க கோவிலுக்கு போகலாம்’

’எஸ்’மேடம் என்று சொல்லிக் கொண்டே பின்னாலேயே போனேன்.

இனிமே எனக்கு எல்லாமே மேடம் தான் !!!