தொடர்கள்
அழகு
கணவனுக்கு திருமணம் செய்து வைத்த இரண்டு மனைவிகள் !! ஆந்திராவில் அற்புதம் - மாலா ஶ்ரீ

20240613153440717.jpg

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், பெடபயலு அருகே கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவர், கடந்த 2000-ம் ஆண்டில் சாகேனி பர்வதம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவரின் இல்லற வாழ்க்கை இனிமையாக இருந்தும் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. இதையடுத்து பாண்டண்ணா குழந்தை பாக்கியத்துக்காக, முதல் மனைவி சம்மதத்துடன் கடந்த 2005-ம் ஆண்டு 2-வதாக சாகேனி அப்பளம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2007-ம் ஆண்டு 2-வது மனைவி சாகேனி அப்பளம்மாவுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. தற்போது அந்த மகனுக்கு 17 வயதாகிறது. இதைத் தொடர்ந்து, தனது முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, 2-வது மனைவி சாகேனி அப்பளம்மா மற்றும் ஒரே மகனுடன் ஒரே வீட்டில் பாண்டண்ணா வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பாண்டண்ணாவுக்கு 2-வது குழந்தை ஆசை துளிர்த்தது மரமாக வளரத் துவங்கியது.

எனினும், முதல் மனைவி சாகேனி பர்வதம்மா குழந்தை பெற்றுத் தரமுடியாத நிலை… 2-வது மனைவி சாகோனி அப்பளம்மாவுக்கும் மற்றொரு குழந்தை பெற்றெடுக்கும் வாய்ப்பு இல்லை. இதைத் தொடர்ந்து, 2-வது குழந்தை ஆசைக்காக பாண்டண்ணா 3-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு, தனது 2 மனைவிகளிடமும் கூறியுள்ளார். இதற்காக அவர்கள் இருவரும் பல்வேறு வகைகளில் பொங்கி எழவில்லை.

மாறாக, தங்கள் கணவரின் குழந்தை ஆசைக்காக 3-வது திருமணத்துக்கு 2 மனைவிகளும் பேசி முடிவெடுத்து சம்மதம் தெரிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக தங்களது கணவரின் 3-வது திருமணத்துக்கு பிரமாண்ட போஸ்டர் அடித்து, ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகளை 2 மனைவிகளான சாகேனி பர்வதம்மா, சாகோனி அப்பளம்மா

ஆகியோர் தடபுடலாக மேற்கொண்டனர்.

ஊர்மக்களிடம் பாண்டண்ணாவின் 3-வது திருமண பத்திரிகையில் 2 மனைவிகளின் கலர் புகைப்படங்களுடன் வழங்கி அசத்தினர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் உள்ளூரிலேயே 2 மனைவிகளின் முன்னிலையில், 3-வது பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி, பாண்டண்ணா திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான திருமண போஸ்டர் மற்றும் வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அனைத்து தரப்பு பெண்களிடமும் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியது.

அப்படியோ உள்ளூர் ஆண்களின் வயித்தெரிச்சலையும் கிளப்பியது என்று போட்டுக் கொள்ளவும்.