தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240714185530685.jpeg

109 பயிர்களை அறிமுகம் செய்தார் மோடி.

கூடவே அதை பயிர் செய்வதற்கான விளைநிலங்களை அறிமுகம் செய்தால் உங்களுக்கு புண்ணியமா போகும்.

மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

ஜாதி அடிப்படையில் ஓகே வா மை லார்ட் !!

ஓய்வூதியரா கார் பந்தயமா எது முக்கியம் அண்ணாமலை கேள்வி .

கார் பந்தயம்னு அக்கா சொல்லுது அண்ணா !!

காலை 8 : 45 க்குள் 4.60 கோடி ஓட்டு பதிவானது எப்படி :நிர்மலா சீதாராமன் கணவர் கேள்வி.

நம்ம வீட்டுக்குள்ளேயே ஒரு ஏழரையை வச்சிருக்கோம் மேடம் !!

எனக்கு சொந்த வீடு இல்லை கர்நாடக சித்த ராமையா.

முதல்வர் பாவம் யாராவது ஒரு வீடு வாங்கித் தாங்கப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு !!

திமுகவை பலத்துடன் வைத்திருக்க வேண்டும் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

இப்ப கொஞ்சம் பலவீனமா தான் இருக்கு போல இருக்கு கட்சி அமைச்சரே சொல்றாரு !!

அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு பரபரப்பு குற்றச்சாட்டு.

அவங்க ஷேர் மார்க்கெட் தானே இது அப்புறம் எப்படி பேசாம இருக்க முடியும்.

ஹிண்டர் ஸ்பார்க் நிறுவனம் செபி தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அது பற்றி பாஜக அரசு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அண்ணாமலை அறிவிப்பு.

அவ்ளோதாமா பஞ்சாயத்து முடிஞ்சுச்சு எல்லாரும் கிளம்புங்க !!

ராகுல்காந்தி ஆபத்தான மனிதர் கங்கனாரானாவத் கடும் விமர்சனம்.

பிரதமர் பயமுறுத்துறாரா எச்சரிக்கிறாரா தெரியலையே !!

53 ஆயிரம் கோடி இழந்த அதானி முதலீட்டாளர்கள் கண்ணீர்.

ஷேர் மார்க்கெட் சூதாட்டம்னு சொல்றாங்க நெசமாவா !!

தமிழகத்தில் நாலு புதிய மாநகராட்சிகள் உதயம்.

எத்தனை கோடிஸ்வர கவுன்சிலர்கள் என்பது திட்டம் என்று முன்னமே சொன்னா நல்லது !!

சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

தேசியக்கொடிக்கு வந்த சத்திய சோதனை !!

தேசியக்கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பு அண்ணாமலை கண்டனம்.

தேசியக்கொடியுடன் வாகன அணி வகுப்பு காங்கிரஸ் அறிவிப்பு.

மீண்டும் கழக அரசு மலர்வதற்கு நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும் எடப்பாடி பேச்சு.

இதைத்தான் அண்ணன் ஓபிஎஸ் அக்கா சசிகலா சொல்றாங்க நீங்க கேட்க மாட்டீர்கள் தலைவரே !!

வட மாவட்டங்களில் 72 சதவீத ஆசிரியர் காலி பணியிடங்கள் தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு.

கல்வியில் நாம தான் முதல்ல அப்படின்னு சொன்னாங்க !!

உதயநிதி துணை முதல்வராவதை முழு மனத்துடன் வரவேற்கிறேன் செல்வப் பெருந்தகை.

அப்ப அமைச்சர்கள் அரை மனதோடு தான் வரவேற்கிறார்கள் என்று சொல்கிறாரா தலைவர் !!

மீண்டும் சொல்கிறேன் கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து முதலமைச்சர் ஸ்டாலின்.

அரசியல் தலைவர்கள் அதனால் தான் அத வச்சு வியாபாரம் செய்றாங்க சரிதானே முதல்வரே !!