தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

மாளவிகா மோகனன்

20240716195546650.jpeg

தங்கலான் படத்தில் காண்டாக்ட் லென்ஸ் போட்டு நடித்ததால் கண்களில் அலர்ஜி ஏற்பட ஐந்து மருத்துவர்களிடம் மாறி மாறி சிகிச்சை பெற்று வருகிறாராம் மாளவிகா மோகன்.

ராஷ்மிகா

20240716200218171.jpeg

ராஷ்மிகா தன்னுடன் நடிக்கும் நாயகர்களுடன் படப்பிடிப்பு இடைவெளியில் அரட்டை அடிப்பார். அதை படம் பிடித்து அவற்றை சுவாரசியமான ஒரு தொகுப்பாக ஆல்பம் செய்து சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு அனுப்புவதோடு சமூக வலைதளத்திலும் பதிவு செய்கிறார் ராஷ்மிகா.

துஷாரா விஜயன்

20240716200345980.jpeg

நான் கதாநாயகியாக நடித்த படங்களை விட ராயல் படத்தில் தங்கையாக நடித்த வேடத்துக்கு எனக்கு பாராட்டுக்கள் குவிக்கிறது என்கிறார் நடிகை துஷாரா விஜயன்.

அபிராமி

20240716200912968.jpeg

விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி திருமணம் முடிந்து நீண்ட ஓய்வுக்குப் பிறகு தற்சமயம் கமலுடன் சேர்ந்து தக்லைப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் மாதிரி எனக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறார் அபிராமி.

கூலி

20240716201419772.jpeg

ரஜினி நடிக்கும் கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவை வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இப்போது எனது ஹீரோ மார்க்கெட் சரியாக இருப்பதால் வில்லனாக நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் நாகர்ஜுனா.

ஜெய்லர் 2

20240716201937869.jpeg

ஜெயிலர் முதல் பாகத்தில் யோகிபாபு நடித்திருந்தார். ஆனால், அவ்வளவு முக்கியத்துவமான கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் யோகிபாபுக்கு முக்கியத்துவம் உள்ள வேடமாக இருக்குமாம்.

திவ்யா துரைசாமி

20240716202143610.jpeg

வாழைப் படத்தில் பல காட்சிகளில் நிஜமாக 50 கிலோ, 60 கிலோ வாழைப்பழத்தை சுமந்து பல மணி நேரம் நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி.

நயன்தாரா

20240716202344613.jpeg

புதிய படத்தில் நடிகர் கவினுடன் மிக நெருக்கமாக நடித்துள்ளாராம் நயன்தாரா. ஆனால், படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

வேட்டையன்

20240716202917163.jpeg

வேட்டையன் படத்தில் ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.