நிர்பயா 2.0
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்சி மருத்துவர் கடந்த 9 ந் தேதி விடியற்காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முதலில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்தாலும் , இறந்து கிடந்த மருத்துவரின் உடற்காயங்களை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள் இறப்பிற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தினை வெளியிட்டது.
மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய ஆரம்பித்ததால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாததால் திண்டாடினர்.
மேற்கு வங்க காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் பயிற்சி மருத்துவர் கொலையில் மருத்துவமனைக்கு உள்ளே உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும்வரை போராடுவோம் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
மேற்கு வங்கம் தொடங்கி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வரை இந்த கொலை விவகாரம் காட்டு தீயாக பரவி ஆங்காங்கே மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தனர்.
பயிற்சி மருத்துவர் கொலையில் நிஜ குற்றவாளிகளை பிடிக்க சிபிஐ விசாரணை கோரி மருத்துவர்கள் ஸ்டிரைக் தொடர்ந்ததால் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கினை சிபிஐ க்கு மாற்றப்பட்டு தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்தினை சல்லடை போட்டு தடயங்கள் சேகரித்தனர் .
இதற்கு முன்பு காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து காதில் பயன்படுத்தும் இயர் போன் ஒன்றை கண்டுபிடித்தனர். அதன் முலம் கொலையாளியை பிடித்து விடலாம் என மாநில போலீஸாருக்கு க்ளூ கிடைத்தது.
அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தபோது சம்பவம் நடந்த விடியற்காலை 2 மணிக்கு பயிற்சி மருத்துவர் உணவு சாப்பிட்டுவிட்டு சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு ஒரு நபர் உள்ளே நுழைந்து அதன்பின் விடியற்காலை வெளியேறியதை சிசிடிவி முலம் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
சந்தேகத்திற்கு இடமான நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தது, பயிற்சி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தங்கள் விசாரனை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
கொலையாளிக்கு நான்கு மனைவிகள் உண்டு என்றும் பெண்பித்தர் என்பதால் நான்காவது மனைவி இவன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மூலம் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. கொலையாளி வன்முறை ஆபாசத்தில் பல பெண்களிடம் காமகொடூரனாக நடந்து வந்துள்ளான். இவன் மருத்துவமனையில் அருகே இருக்கும் சில காவல்நிலைய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதால் எந்நேரமும் மருத்துவமனைக்கு உள்ளே வந்து செல்லும் நபராக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்மருத்துவரின் தந்தை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முன்பு பிணவறையில் சென்று பார்த்தபோது தன் மகள் கால் 90 டிகிரிக்கு உடைக்கப்பட்டும் , இடுப்பு எலும்பு முறிவு, கண்களில் இருந்து ரத்தம் கசிந்தும் உடல் முழுக்க காயம் ஏற்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக தனது உறவினர்களிடம் சொல்லி கதறி அழுதார் என்ற தகவல் வருகிறது.
கொலையாளியை காவல்துறையினர் சிறப்பு ட்ரிமெண்டு கொடுத்து விசாரித்த போது அவர் பயிற்சி மருத்துவரை கொலை செய்து பாலியியல் பலாத்காரம் செய்ததை ஒத்துகொண்டான்.
கொலையாளி சமூக சேவகராக அடையாளப்படுத்தபடும் சஞ்சய் ராய் என்றும் அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பயிற்சி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு கொலையாளி விடியற்காலை நேரத்தில் தனது வீட்டிற்கு சென்றவன் தனது ரத்தம் பட்ட ஆடைகளை துவைத்து போட்டு விட்டு தூங்கி இருக்கிறான்.ஆனால் கொலையாளி தனது கால் ஷுவில் இருந்த ரத்த கரைகளை கழுவ மறந்ததால் கொலையாளி காவல்துறையினர் அப்படியே அலாக்காக தூக்கி கொண்டு வந்து கைது செய்தனர்.
சிபிஐ தடய அறிவியல் துறையினர் உதவியோடு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை மத்திய சுகாதார துறை அமைச்சர் சமாதானப்படுத்தினர்.
பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதிகிடைக்க வேண்டும் என்று மேற்வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜி போராட்டம் நடத்தி ஊர்வலம் சென்றார்.
சட்டம் ஒழுங்கு மம்தாவில் கையில் இருக்க அவர் ஏன் ஊர்வல செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது ??
மருத்துவர்கள் இது நிர்பயா 2.0 கொலை என்று போராட்ட களத்தில் இறங்கி நீதி கிடைக்க வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றனர்.
– நமது கொல்கத்தா நிருபர்
Leave a comment
Upload