தொடர்கள்
கவர் ஸ்டோரி
வயநாடு ! சீதா கட்டிய பாலம் ! -ஸ்வேதா அப்புதாஸ் .

கேரளா வயநாட்டில் உள்ள முண்டக்கை அட்டமலை , சூரல் மலை சுற்றுலா கிராமங்களில் அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டு மிக பெரிய நிலச்சரிவு ஒரு மலையே பெயர்ந்து மூன்று கிராமங்களை முழுமையாக கவ்வி ஏராளமானோர் இறந்து காணாமல் போய்விட்ட சோகம் உலகையே உலுக்கிவிட்டது .

மண் பாறைகள் உருண்டு வெள்ளத்தால் உருக்குலைந்து போய் சூரல் மலையில் இருந்து முண்டக்கை மற்றும் வயநாடுக்கு கூட செல்ல முடியாமல் மீட்பு பணி மேற்கொள்ள முடியாமல் தவித்தனர் .

20240716141301588.jpg

இந்திய ராணுவம் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி கொடூர சோகத்திலும் மிக பெரிய உதவி சாதனையை செய்துள்ளது .

எல்லோரும் சேர்ந்து மர பாலத்தை சேறு சகதியுமான இடத்தில் கட்டி முடித்து 31 ஆம் தேதி கொட்டின மழையில் அந்த மர பாலம் அடித்து சென்றது .

இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியியல் குழு அதிரடியாக சூரல் மலையையும் முண்டக்கை கிராமத்தை இணைக்க பெயிலி பிரிட்ஜ் கட்ட முடிவு செய்யப்பட்டது .

காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்த ஓடிக்கொண்டிருந்த இறவஞ்சிப்புழா ஆற்றின் மேல் போர்க்கால அடிப்படையில் 150 ராணுவ பொறியியல் வீரர்கள் களத்தில் இறங்கினார்கள் .

20240716141501766.jpg

மிக பயங்கர நிலச்சரிவு பாறைகள் மண் குவியல் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் மழை கொட்டிக்கொண்டிருக்க காணாமல் போன மக்களை தேடும் படலம் தொடர இதற்கிடையில் துணிச்சலான நம் ராணுவம் 33 மணிநேரத்தில் பெயிலி பிரிட்ஜ் கட்டும் பணியை முடித்தனர் .

கர்நாடக மற்றும் கேரளா Genaral Officer Commanding மேஜர் ஜெனரல் வி .டி .மேத்தியூ முயற்ச்சியில் பெயிலி பிரிட்ஜ் கட்டுமான பொருள்கள் விமானம் மூலம் பெங்களூரில் இருந்து கண்ணூர் விமான தளத்திற்கு கொண்டுவந்து 20 ட்ரக்குகளில் சூரல் மலைக்கு கொண்டுவந்து ஜூலை 31 ஆம் தேதி இரவு 9 மணிக்கு கொட்டும் மழை என்றும் பாராமல் பாலம் கட்டும் பணியை துவங்கி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாலம் ரெடியாகி மூத்த அதிகாரி மேத்தியூ ஜீப்பில் பயணித்தார் .

20240716141707194.jpg

இந்த புதிய பாலத்தில் 24 டன் எடை எடுத்து செல்லலாம் ,ஜேசிபி , ட்ரக்குகள் , ஆம்புலன்ஸ் பயணிக்கலாம் .

இந்த பெயிலி பிரிட்ஜ் முன்னின்று கட்டின இந்திய ராணுவ எழுவது அதிகாரிகளில் ஒரே பொறியியல் பெண் சிங்கம் மேஜர் .சீதா அசோக் ஷெல்க் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறது .

20240716141732262.jpg

மேஜர் சீதா இந்த கொடூரமான தருணத்தில் மிக துணிச்சலாக பாலத்தை கட்டி முடித்துள்ளார் .

நான் ஒரு பெண் அதிகாரி என்று நினைக்கவில்லை , நான் ஒரு இந்திய ராணுவ வீரர் மட்டுமே .மிக பெரிய சாவலுடன் இந்த வேலையயை செய்து முடித்தோம் .பொருள்கள் கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டோம் .சரியான பாதையில்லை வெள்ளம் ஆர்ப்பரித்து ஓட மழை கொட்ட சேரும் சகதியில் பணியை துவக்கினோம் .ஒரு பக்கம் இறந்த உடல்கள் மற்றும் மீட்பு பணி தொடர அவர்களின் தொடர் பணிகளுக்கிடையில் நம் மெட்ராஸ் தம்பிகள் அயராது பிரிட்ஜை கட்டி முடித்தார்கள் இது எங்களின் இந்திய ராணுவத்தின் ஒரு பணி எங்களின் உதவி கடமை" என்று கூறினார் சாதனை பெண் அதிகாரி .மேஜர் சீதா

20240716141803648.jpg

அவசர காலத்தில் செட்டப் செய்து பொருத்தப்படும் பாலம் தான் பெய்லி பிரிட்ஜ்.வயநாடு நிலச்சரிவு பகுதியில் அமைக்கப்பட்ட பெய்லி பிரிட்ஜ் 190 அடி நீளம் கொண்டது .எதிர் காலத்தில் இந்த கொடூர பகுதியில் நிரந்தர பாலம் கட்டும் வரை பெய்லி பிரிட்ஜ் உதவியாக இருக்கும் என்கின்றனர் ராணுவ தம்பிகள் .

20240716142325840.jpg

இந்த பெய்லி பிரிட்ஜில் முதலில் நடந்து சென்று நிலச்சரிவு பகுதியை பார்வையிட்டவர் ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் தான் .

20240716210003604.jpg

கேரள முதல்வர் பினராய் விஜயன் அதற்கு பின் நம் பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டனர் .

தற்போது வயநாட்டில் பெண் அதிகாரி சீதா தலைமையில் கட்டிய பெய்லி பாலம் உலகம் முழுவதும் பேசப்படுகிறது .