தமிழகத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தன் நியமனம் இல்லாமல் அலைக்கழிக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பதவி காலம் முடிவுக்கு வந்தது. இப்போது அங்கும் துணைவேந்தர் பதவி நியமனம் இல்லை பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர்.
துணைவேந்தர்கள் நியமனம் என்பது பெரும்பாலும் மாநில அரசு பரிந்துரை செய்பவரை துணைவேந்தராக நியமிப்பது என்பதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கமாகவும் பழக்கமாகவும் இருந்தது. ஆனால், இப்போது ஆளுநர் அதை விரும்பவில்லை என்பது போல் அவர்கள் நடவடிக்கை இருக்கிறது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் சம்பந்தமாக கேரளா தமிழ்நாட்டில் தொடர்ந்து மோதல் போக்கு காரணமாக உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரம் போய் துணைவேந்த நியமனம் மாநில அரசு உரிமை. அதில் ஆளுநர் தலையிடக்கூடாது என்றெல்லாம் கூட அறிவுறுத்திய பிறகும் இந்த மோதல் போக்கு தொடர்கிறது.
துணைவேந்தர் நியமனத்தில் மூன்று நபர் தேடுதல் குழு என்பதை மாற்றி யுஜிசி தலைவரால் பரிந்துரைக்கப்படும் நான்காவது நபரை அந்தக் குழுவில் ஆளுநர் இணைத்தார். தமிழக அரசு இதை கடுமையாக எதிர்த்தது. தமிழக அரசை ஆலோசிக்காமல் ஆளுநர் இந்த முடிவை எடுத்ததை தமிழக அரசும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தது அதனைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், துணைவேந்தர் பதவியை நியமனம் செய்யாமல் தற்சமயம் தேவை இல்லாமல் ஆளுநர் காலதாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியல் கட்சிகள் கல்வியாளர்கள் என்று எல்லோரும் தற்சமயம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சமீபத்தில் காலியாக உள்ள அண்ணா பல்கலைக்கழகம் என்று நான்கு முக்கிய பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்குகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் 55 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி பட்டம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இது தவிர பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. யுஜிசி நிதி குறைப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி என்று பல்கலைக்கழகங்கள் நிர்வாக தலைமையின்றி சீரழிந்து கொண்டிருக்கின்றது.
இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களால் சான்றிதழ் ஆராய்ச்சி மாணவர்கள் பட்டய சான்றிதழ்கள் பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இது போதாது என்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கடும் நிதி சிக்கலில் சிக்கி தவிக்கின்றன. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழகம் மானிய குழு பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குவதை முற்றிலும் நிறுத்தி வைத்திருக்கிறது. அது மட்டுமல்ல மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதிகளையும் குறைத்துவிட்டது அல்லது நிறுத்திவிட்டது. இதனால் பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலையில் உள்ளது. ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்கள் அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கூட வழங்க இயலாமல் உள்ளன. எனவே இவற்றை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் தேர்வு கட்டணம், சேர்க்கை கட்டணம், விடுதி கட்டணம் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி நிதி சுமையை மாணவர்கள் தலையில் கட்டி விட்டது.
சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் வழக்கில் சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் பதவி காலம் முடிந்த பிறகும் தமிழக அரசின் மீது உள்ள கோபம் காரணமாக ஆளுநர் அவருக்கு பதவி நீட்டிப்பு தந்து துணைவேந்தராக தொடர்ந்து பணிபுரிகிறார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் ஆளுநர் ஆளும் அரசு மோதலால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை ஆளுநரும் புரிந்து கொள்ளவில்லை தமிழக அரசும் புரிந்து கொள்ளவில்லை. மொத்தத்தில் மாணவர்கள் பாவம்.
Leave a comment
Upload