சமீபத்தில் குடும்பத்துடன் ஹவாய் தீவுகளுக்கு ஹாய்யா சென்று வந்தோம்.
“ஹவாய் தீவுகள்” அமெரிக்காவின் 50 வது மாநிலம்.
பசிபிக் கடலில் வடக்கு அமெரிக்காவின் பெரும் நிலபரப்பிலிருந்து, சுமார் 2400 மைல் தூரத்துக்கு அப்பால் தெற்கிலிருந்து வடக்காக 1000 மைலுக்கும் மேல் பரந்து கிடக்கும் தீவுக்கூட்டங்கள். மேற்கு கரை SFO அல்லது LA நகரத்திலிருந்து ஐந்து மணி நேர விமான பயணத்தில் ஓஹாஹு தீவிலுள்ள ஹோனலூலு ஏர்போர்ட் வந்தடையலாம்.
இந்த தீவுதான் இந்த தீவு கூட்டங்களில் இரண்டாவது பெரிய தீவு. ஜனத்தொகையும் இங்கு தான் அதிகம்.
வைகிகி பீச்சில் உள்ள ஹில்டன் ஹோட்டல் தான் ஐந்து நாட்களுக்கு ஜாகை.
ஹவாய் தீவு கூட்டங்களில், எட்டு தீவுகள்தான் குறிப்பிடும்படி நிலப்பரப்பினை கொண்டும் மக்கள் வாழ்வதற்கு தகுதியானதாகவும் கருதப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. மற்றவை கணக்கில்லாத சிறிய நிலப்பரப்பு கொண்ட தாவரங்கள் வளர முடியாத மணல் அல்லது பாறைகளால் உண்டான, திட்டு பகுதிகள்.
மக்கள் வசிக்கும் அந்த எட்டு தீவுகளில் பத்தாயிரம் சதுர கிமீ கொண்ட “பெரிய தீவு” ஹவாய் என்ற அழைக்கப்பட்டு, அதே பெயரில் மொத்த தீவுக்கூட்டத்திற்கும் “ஹவாய் தீவுகள்” என்ற பெயர் நிலைத்துவிட்டது.
அடுத்த பெரிய தீவான ஓஹாஹூ (O’HAHU) பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் வாழும் ஜனநெரிசல் நிறைந்த தீவு. இங்குதான் இத்தீவுக்கூட்டத்தின் தலைநகரம் ‘ஹோனோலுலு’ (HONOLULU) அமைந்துள்ளது. உலகின் புகழ்பெற்ற சில முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக கருதப்படும் ஹவாய் தீவுகளுக்கு வரும் பெரும்பாலானவர்கள் இந்த இரண்டு தீவுகளில் தான் தங்கள் விடுமுறையை கொண்டாடிவிட்டுச் செல்கின்றனர். சுற்றுலா வரும் பயணிகளில் மிகவும் குறைந்த சிலர் மற்றைய தீவுகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இடத்திற்கு தனிமையில். கடற்கரை அனுபவத்திற்காக சென்று வருகின்றனர். பெரும்பாலும் பொதுவாக தீவுகளுக்கு இடையே சிறிய ரக விமான போக்குவரத்து மட்டுமே உள்ளது. சில தீவுகளுக்கிடையே தான் விசைப்படகு சேவை உள்ளது.
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிலிருந்து ஹவாய் தீவுகளுக்கு வந்த குடியேறிய பெருந்தோட்டத்துறை வர்த்தகர்கள் பழங்குடி மக்களை அடிமைகளாக நடத்தி நிர்வாகத்திலும் ஆதிக்கம் அடைய அங்கு ஆட்சியிலிருந்த ராஜ வம்சத்தை அகற்ற, பாலினேசிய இனத்தவர்களின் எழுச்சி உண்டானது.
அமெரிக்கர்கள் இரண்டு நூற்றாண்டுகளாக தோட்டங்கள், காய்கறிகள் மற்றும் பழ பண்ணைகளை நிறுவினர், ஹவாய் தீவின் காலனித்துவத்திற்கு வழிவகுத்தது.
1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நாஜிகளுக்கு எதிரான கூட்டணி படைகளில் சேராமல் தடுமாறி கொண்டிருந்த அமெரிக்கா, சரித்திரத்தின் மாபெரும் நிகழ்வு ஒன்றை ஓஹாஹூ தீவின் (PEARL HARBOUR) பேர்ள் துறைமுகத்தில் எதிர்கொண்டது. பர்மா, தாய்லாந்து, மலேயா, சிங்கப்பூரை முறியடித்த பின் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஹோனோலுலு துறைமுகத்தை ஜப்பான் விமானப்படை தாக்கியது. ஜப்பான் தாக்குதலில் பேரழிவை கண்ட அமெரிக்க கடற்படை தளம் தற்போது ஹவாயின் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாக மாறிவிட்டது.
அமெரிக்கர்கள் மியூசியம் வைக்க, இதற்குப் பழி வாங்கும் விதமாக அமெரிக்கா போட்ட அணுகுண்டு இன்றும் ஹிரோஷிமா நாகசாகியில் அந்த பேரழிவின் தழும்பை விட்டு வைத்திருக்கிறது.
[மேலே: பேர்ல் ஹார்பரின் நுழைவாயிலில் பல்வேறு அருங்காட்சியகங்கள் உள்ளன]
[மேலே: அரிசோனா நினைவுச்சின்னம்]
யுஎஸ்எஸ் மிசோரி – 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முடிவில் இந்தக் கப்பலில்தான் ஜப்பான் சரணடையும் பத்திரத்தில் கையெழுத்திட்டது]
உலகப்போர் அருங்காட்சியகத்தில் ஜப்பானின் “தோரா தோரா” (Tora Tora) என்ற இந்த தாக்குதலின் விவரங்கள், கடற்படையின் இழப்புகள், ஜப்பானின் விமானங்கள் வீசிய எதிர்பாராத மிக நவீன (Undersea Torpeado) டார்பிடோ பாகங்கள், நாசமான போர் கப்பல் மற்றும் விமான விவரங்களை காண முடிகிறது.
பேர்ல் துறைமுகத்தில் ஜப்பானிய விமானப்படையின் "டோரா டோரா" திட்டம் ஹொனலுலுவில் உள்ள கடற்படைத் தளத்தை முழுவதுமாக அழித்தது மற்றும் அதன் வான் வலிமையையும் சிதறியது.
பல போர்க்கப்பல்களை அழிக்க ஜப்பானிய விமானங்கள் பயன்படுத்திய கடலுக்கடியில் ஏவுகணை
[மேலே : கடலுக்கடி ஏவுகணைகள்(undersea missiles) போர்க் கப்பல்களை உடைத்தெறிந்தன]
நாங்கள் அங்கிருக்கையில் தற்செயலாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் ஒன்று பேர்ல் ஹார்பர் வழியாக சென்றது, அதில் மாலுமிகள் நின்று கொண்டு பேர்ல் ஹார்பர் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கம்பீரமான காட்சியாக இருந்தது. வீடியோ பாருங்கள்.
அடுத்த வாரத்தில் கடற்கரைகள், மக்கள், இஸ்கான் கோயில் பற்றிய விவரங்களுடன் முடிகிறது.
அலோஹா அலோஹா அலோஹா (ஹவாய் மக்கள் கூறும் வணக்கம்)
Leave a comment
Upload