'விகடகவியார் இன்னிக்கு வரார் ' என்று ஆபீஸ் பையன் சொன்னபோது ' உனக்கு யார் சொன்னது ? ' என்று நாம் அவரைக் கேட்ட போது ' அவர் எனக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் ' என்று சொன்னதும், நாம் கோபமாக ' ஏன் அவர் எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாரா .' என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே விகடகவியார் உள்ளே நுழைந்தார். நாம் எதுவும் பேசாமல் அமைதியாக அவரை வரவேற்றோம்.
'மறுபடியும் செம வெயில் ஆரம்பம் ஆயிடுச்சு' என்று சொல்லியபடியே ஜில்லென்று நன்னாரி சர்பத்தை கொண்டு வந்தான் ஆபீஸ் பையன். அவனை தட்டிக் கொடுத்து சர்ப்பத்தை உறிஞ்சி விட்டு "உங்களுக்கு கலைஞர் 100 ரூபாய் நாணயம் வந்ததா ?"என்று நம்மைப் பார்த்து விகடகவியார் கேட்க, 'நாம் இல்லையே 'என்று நாம் சொன்னதும் 'வேண்டப்பட்ட பத்திரிக்கையாளர் பட்டியலில் நீங்கள் இல்லை போலும் 'என்று சொல்லி சிரித்தார்.
"நீங்கள் நிகழ்ச்சிக்கு போனீர்கள் போலிருக்கிறது "என்று நாம் ஆரம்பிக்க எனக்கு அழைப்பு வந்தது போனேன். அங்கே அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். அதேபோல் அமைச்சர்கள் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். முதல்வரின் குடும்ப உறவுகளுக்கு தான் முதல் வரிசை மரியாதை கிடைத்தது. அமைச்சர் ராஜநாத் சிங் கருணாநிதியின் நினைவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது முதலில் நிகழ்ச்சி நிரலில் இல்லை, பிறகு சேர்க்கப்பட்டது. அங்கு அண்ணாமலை ஒதுங்கி இருந்தார். அவரை முதலமைச்சர் முன்னே வந்து நில்லுங்கள் என்று சொல்லி கனிமொழி அருகே நிற்க வைத்தார் "என்று சொல்லி சிரித்தார்.
தொடர்ந்த விகடகவியார் "ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சரை மாநில அரசு அழைத்தது போனது சரி, அண்ணாமலை தீவிர திமுக எதிர்ப்பாளர் அவர் போயிருக்க கூடாது "என்ற பேச்சு பாஜக தொண்டர்கள் மத்தியில் வரத் தொடங்கி இருக்கிறது என்று சொன்னபோது இதை காங்கிரஸ் கட்சியும் வேறு மாதிரி பார்க்கிறது என்று விகடகவியார் சொன்னபோது, அது என்ன வேறு மாதிரி என்று நாம் கேட்டபோது இதற்கு நான் ஆளுநர் தேனீர் விருந்து விஷயத்தில் இருந்து வர வேண்டும் என்ற விகடகவயார்.
முதலில் தேனீர் விருந்து திமுக புறக்கணிப்பதாக அறிவித்தது, கூட்டணி கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்தது, பிறகு திடீரென்று சுதந்திர தின தேநீர் விருந்தில் ஆளுநர் மாளிகையில் கலந்து கொள்வோம் என்று திமுக சார்பில் அறிவிப்பு வெளியானது, தேநீர் விருந்தில் முதல்வர் உள்பட எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் முதல்வரும் ஆளுநரிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அமைச்சர் ஏவா வேலு அண்ணாமலையை வழிமறித்து கண்டிப்பாக கலைஞர் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தினார். ஏற்கனவே முதல்வர் அண்ணாமலை தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு வர அழைத்தார் இதெல்லாம் தற்சமயம் திமுகவின் கூட்டணி கட்சிகளில் பேசும் பொருளாக இருக்கிறது. பாஜகவை எதிர்ப்பதால்தான் நாங்கள் திமுக கூட்டணியில் இணைந்தோம். திமுகவின் எல்லா திட்டங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி கண்மூடித்தனமாக ஆதரிக்காது என்று அவர்கள் பேசியது எல்லாமே பாஜக பக்கம் திமுக போனால் எங்கள் நிலைப்பாடு இதுதான் என்று கூட்டணிக் கட்சிகளின் கருத்தாக திமுக பார்க்கிறது என்றார் விகடகவியார்.
மிச்சம் இருந்த நன்னாரி சர்பத்தை உறிஞ்சி விட்டு தொடர்ந்த இதுதான் சாக்கு என்று எங்களை பாஜகவின் பி டீம் என்று சொன்னீர்கள். இப்போது நீங்கள் அவர்களுடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரிந்து என்று நக்கல் பண்ணினார் எடப்பாடியார். உடனே இதற்கு எடப்பாடியாரை தரக்குறைவாக விமர்சித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டார். மொத்தத்தில் கருணாநிதி நாணய வெளியிட்டு விழா அரசியல் குழப்பத்தை தற்சமயம் ஏற்படுத்தி இருக்கிறது என்றார் விகடகவியார்.
சரி அது இருக்கட்டும் அமைச்சரவை மாற்றம் கதை என்ன என்று நாம் கேட்டதும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் சில சேர்ப்பு சில கழிவு சில இலக்கா மாற்றம் என்பது முதல்வரின் நீண்டகால யோசனையாக தான் இருக்கிறது. ஆனால், அது எந்த விளைவை ஏற்படுத்தும் என்ற பயம் அவருக்கு இருக்கிறது. எனவே அமைச்சர்களுக்கு பூச்சாண்டி காட்ட அமைச்சரவை மாற்றம் செய்தியை உளவுத்துறை மூலம் முதல்வர் தரப்பே பரப்புகிறது என்ற ஒரு பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது என்று விகடகவியார் சொன்னதும்,
நாம் திமுகவின் கலைஞர் டிவியில் நேற்று அமைச்சரவையில் மூத்த அமைச்சர் உட்பட மூணு பேர் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் என்று பிளாஷ் நியூஸ் போனது. நாங்கள் பார்த்தோம் என்று கேட்டதும், நேற்று விஜய் கட்சிக்கொடி அறிமுகம் செய்தார் அந்த செய்தியை அமுக்கத்தான் இந்த பிளாஷ் நியூஸ் என்று ஒரு பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. அமைச்சர்கள் டென்ஷனில் இருந்தார்கள். தங்களுக்கு தெரிஞ்ச சோர்ஸ்களில் எல்லாம் யார் உள்ளே யார் வெளியே என்று நச்சு பண்ணி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
முதலமைச்சரிடம் நிருபர்கள் அமைச்சரவை மாற்றம் என்று செய்தி வருகிறது என்ற கேள்விக்கு அவ சிரிச்ச படி எனக்கு அந்த செய்தி இன்னும் வரவில்லை என்று சொல்லி நகர்ந்து விட்டார். அதன்பிறகு தான் கொஞ்சம் அமைச்சர்கள் மூச்சு விட ஆரம்பித்தார்கள்.
அப்போது திடீரென தலைமைச் செயலாளர் ஆளுநர் மாளிகை போயிருக்கிறார் என்ற செய்தி வந்ததும் மீண்டும் அமைச்சர்கள் டென்ஷன் ஆனார்கள். புது தலைமைச் செயலாளர் பொறுப்பேற்றதும் சம்பிரதாயத்திற்காக ஆளுநரை சந்தித்து வணக்கம் சொன்னார் என்ற செய்தி வந்ததும் மீண்டும் நிம்மதியானவர்கள் என்று சொல்லி சிரித்தார் விகடகவயார்.
சரி டெல்லி செய்தி எதுவும் இல்லையா என்று நாம் கேட்டதும் கங்கனா ரனாவத் படம் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இனிமேல் அடிக்கடி தேவைப்படும் என்று சொல்ல நாம் அது எதற்கு என்று கேட்க ராகுல் காந்தி நல்ல சுறுசுறுப்பாக எழுச்சி அடைவதாக ஒரு தகவல் பாஜக காதிற்கு எட்டி இருக்கிறது. கங்கனா ரனாவத் எமர்ஜென்சி என்று ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறார். அந்தப் படம் மூலம் காங்கிரஸ் இமேஜ் டேமேஜ் ஆக வேண்டும் அந்தப் படத்தை சீக்கிரம் வெளியிடும் வேலையை பாருங்கள் என்று அவருக்கு பாஜக கிட்டத்தட்ட உத்தரவே போட்டு இருக்கிறது. அதனால் தான் போன வாரம் தனது எக்ஸ் தளத்தில் அம்மணி ராகுல் காந்தி ஆபத்தானவர் என்று அவரை திட்டி கருத்து பதிவு செய்திருந்தார். ஏற்கனவே அவசரநிலை அறிவிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக கொண்டாடப்படும் என்று பாராளுமன்றத்தில் பாஜக அறிவித்திருக்கிறது. மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி வளர்வது சரி இல்லை என்பது மோடி அமித்ஷா கவலை என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload