நித்யா மேனன்
மலபார் மங்கை நித்யா மேனனுக்கு, தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் அவரது சிறந்த நடிப்பை பாராட்டி தேசிய விருது கிடைத்திருக்கிறது. இது நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார் நித்யா மேனன்.
தனுஷ்
தனுஷ் நடிக்கும் அடுத்த இந்தி படத்தில் ஆதி புரூஷ் படத்தில் சீதையாக நடித்த கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
போட்டி
படங்களில் குத்தாட்ட பாடல்களுக்கு 5 கோடி ரூபாய் கேட்கிறார் சமந்தா. நான் மூன்று கோடி வாங்கிக் கொண்டு குத்தாட்டம் போட தயார் என்கிறார் தமன்னா. இந்த டீல் நல்லா இருக்கு என்று தயாரிப்பாளர்கள் இப்போது தமன்னாவை அணுகுகிறார்கள்.
விஜய்
விஜயின் 69-வது படத்தில் விஜய் மகளாக மலையாள படத்தின் மூலம் பிரபலமான மமீதா பைஜு நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நாயகி நடித்த ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி போன்ற படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளன.
விஜய் வாரிசு
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கொஞ்ச நாள் தான் டைரக்டரா இருப்பாராம். அதன் பிறகு கேமரா முன்னால் நடிக்கப் போயிடுவேன் என்கிறார். .
சூரி
நடிகர் சூரி இப்போது வெப் தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அவங்களும் நிறைய தான் பணம் தராங்களாம்.
மஞ்சு வாரியார்
எனக்கு இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ரசிகர்கள் அன்பு மட்டுமே போதும் என்கிறார் மஞ்சு வாரியார்.
ரஜினிக்கு போட்டி
அக்டோபர் 10-ல் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் சூர்யா நடிக்கும் காங்குவா படம் ரிலீஸ் ஆகிறது.
அண்ணன் அறிமுகம்
மாம்பழத் திருடி என்ற படத்தில் ரஜினி அண்ணன் சத்யநாராயணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ்
சுதா கொங்காரா இயக்கும் புறநானூறு படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறாராம்.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான உல் ஜா படம் சரியாக போகவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார் நடிகை.
நிகிலா விமல்
ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் நிகிலா விமல்.
கீர்த்தி ஷெட்டி
தென்னிந்தியாலே அதுவும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகை கீர்த்தி ஷெட்டி தானம், காரணம் அவர் கவர்ச்சிக்கு தடை சொல்வதில்லை என்பதுதான்.
அஜித்
தனது மகள், மகன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்வார் நடிகர் அஜித்.
Leave a comment
Upload