தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20240723093052901.jpeg

கல்வியின் தரத்தை தமிழக அரசு உயர்த்தவில்லை அண்ணாமலை.

உதயநிதி ஸ்டாலின் கிட்ட இத பத்தி தான் பேசிக் கொண்டிருந்தீர்களா !!

பிரதமர் மோடியும் திராவிடர் தான் எச்.ராஜா.

அப்ப இனிமே டெல்லியில் திராவிட மாடல் ஆட்சி தானா !!

கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம் முதல்வர் ஸ்டாலின் நன்றி.

இருக்கட்டும் இருக்கட்டும்.

திமுக - பாஜக உறவு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது பழனிச்சாமி கருத்து.

இனிமே அவங்க தான் பி டீமா நீங்க இல்லையா !!

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் முதல்வரானால் வரவேற்போம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்.

ஆனா தானே !!

அனைத்துக் கட்சியிலும் குடும்ப சாயல் இருப்பது இயல்பு தான் கே.பாலகிருஷ்ணன்.

இந்த இடத்தில் இத சொல்லியே ஆகணும்னு சொல்றாரு !!

கடன் வாங்கி கட்சிக்கு செலவிடுங்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன்.

அதாவது இன்றைய செலவு நாளைய மெகா வரவு அப்படின்னு அண்ணன் சொல்றாரு !!

திமுக, பாஜக ரகசிய உறவு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

அண்ணன் சி.ஐ.டி சங்கர் மாதிரி கரெக்டா கண்டு பிடிப்பாரு !!

தொடர்ந்து பத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் முதலமைச்சர் ஸ்டாலின்.

உங்கள உசுப்பேத்தறதே இவர் வேலை !!

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.

எதுக்கும் பிரதமர் பிபி செக் பண்ணுங்க பா !!

கங்கையில் கட்டப்படும் பாலம் மூன்றாவது முறையாக இடிந்தது.

மொத்த ரூபாயும் கமிஷனுக்கு போயிருச்சோ என்னவோ !!

ஜாதியை ஒழிப்பது தான் விடுதலை சிறுத்தை கட்சி நோக்கம் தொல்.திருமாவளவன்.

அப்ப இட ஒதுக்கீடு எல்லாம் பேச மாட்டீங்களா !!

தலித் ஒருவர் முக்கிய அமைச்சர் பொறுப்புக்கு வரவில்லை ஏன் என்பதை ஆட்சி செய்பவர்களிடம் தான் கேட்க வேண்டும் கார்த்தி சிதம்பரம்.

ஆமாமா நீங்க அப்படி தான் சொல்லணும் !!

என் பெயரைக் கேட்டாலே திமுகவினர் நடுங்குகிறார்கள் குஷ்பூ.

பாவம் உச்சா போயிடப் போறாங்க விட்டுடுங்க !!

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால் அதற்குத் தகுதி உடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் கார்த்திக் சிதம்பரம்.

அந்தத் தகுதி தான் அம்பது வருஷமா உங்களுக்கு இல்லையே !!

முல்லைப் பெரியாறு உடைந்தால் யார் பொறுப்பு மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கேள்வி.

இது ஏதோ முதல்வரின் மனதின் குரல் மாதிரி இருக்கு !!

தமிழகத்தில் நடப்பது ஒரு இனத்தின் அரசு முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த இனத்துக்கு பேரு கருணாநிதி இனம் கரெக்டா தலைவரே !!