நேரம் = பணம்

நாம் எல்லோரும் பணத்துக்காக அலைகிறோம். பொழுது விடிந்து பொழுது போனால் , காலை முதல் இரவும் தொடர்ந்து அதிகாலை வரை உழைக்கின்றனர்.
முன்னெல்லாம் வேலை செய்ய நேரம் காலம் இருந்தது. அனைத்து அலுவலகங்கலும் , கடைகளும் ஒரு குறுப்பிட்ட நேரமே வேலை செய்தனர். ஆனால் இப்பொழுது அனேக நிறுவனங்கள் 24 x 7 வேலை செய்கின்றன. காரணம் அதிக நேரம் வேலை செய்தால் அதிக பணம் . முன்பெல்லாம் வேலை நேரம் என்பது எட்டு மணிநேரம் தான் இருந்தது . இப்பொழுது பத்து முதல் பன்னிரெண்டு மணிநேரமாக அதிகரித்துவிட்டது.
கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யத் தொடங்கினர். காரணம் அங்கு அவர்கள் வாங்கும் சம்பளம் நம் நாட்டு பணத்தின் மதிப்பை விட அதிகம் என்பதால். அவர்கள் அதே பத்து மணி நேரம் அங்கு வேலை செய்தால் இங்கு நம் நாட்டில் வாங்கும் பணத்தை விட அதிகம் வாங்குவர் .
அதே போல் இப்பொழுது ஐ டி துறையில் பலர் வீட்டிலிருந்து மற்ற நாட்டு நிறுவனங்களில் பணி புரிகின்றனர் . இந்தியாவில் வேலை செய்துகொண்டே வெளிநாட்டு பணத்தில் வருமானம் ஈட்டுகின்றனர்.இது போல் பணம் சம்பாதிக்க அதிக வழிகள் இருக்கின்றது.
நமக்கு தெரியவேண்டியவை எல்லாம் நம் நேரத்தை எப்படி காசாக்குவது? நமது நேரத்தை எதில் செலவிட்டால் நமக்கு அதிகம் பணம் கிடைக்கும் என்று ஆராய்ந்து உழைப்பது . இன்று வீட்டில் இருந்தபடியே சுமார் இரண்டு மணி நேரம் செலவு செய்து மாதம் ஐம்பது ஆயிரம் சம்பாதிக்கும் வழிகள் கூட உள்ளது.
இணையம் நமக்கு ஒரு மிகப்பெரிய வணிககளத்தை உருவாக்கி கொடுத்து உள்ளது.
நாம் நம் வீட்டில் அமர்ந்தபடியே நமக்கு தெரிந்த விஷயங்களை,நம் திறமைகளை ,வெளியுலகில் வியாபாரம் செய்யமுடியும். ஒரு பொருளையோ, சேவையையோ சந்தைப்படுத்துதல் மிக எளிது. நம் சௌகரியத்துக்கு, நமக்கு நேரம் கிடைக்கும் பொழுது நமது நேரத்தை ஒழுங்காக பயன்படுத்துவோமேயானால் நாம் அருமையாக சம்பாதிக்க முடியும் .
அலைந்து திரிந்து ,கஷ்டப்பட்டு உழைத்த காலங்கள் குறைந்துகொண்டே வருகிறது . நமது புத்திசாலித்தனத்தால் சாதுர்யமாக உழைத்து வருமானம் ஈட்டும் காலம் இது .
நமது நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி அருமையாக சம்பாதிப்போம்.
வரும் வாரங்களில் அதற்கான வழிகளை பகிர்கிறேன்.
நேரத்தை பற்றி பேசியதால் ஓர் முக்கியமான நேரத்தை பற்றி ஓர் சிறிய செய்தி
பொன்னான நேரம் என்பார்கள், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் . இந்த வருடம் அட்சயதிதி புதன் கிழமை ஏப்ரல் 18 அன்று வருகிறது . அன்று என்ன சிறப்பு என்கிறீர்களா?
அட்சய என்ற திதி மஹாலக்ஷ்மி பூஜை செய்வதற்கும், பணத்தை பெருக்குவதற்கும், தங்கம் வாங்குவதற்கும், வியாபாரம் செய்வதற்கும் மிகச்சிறந்த நாள். நம் மூதாதையர்கள் சொன்னது போல அன்று நம்மால் முயன்ற ஓர் நல்ல விஷயத்தை செய்யலாமே .

அட்சயதிதியில் நடந்த சில ஐசுவரிய நிகழ்வுகள் இங்கே:
பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
ஆதிசங்கர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க மழை பெய்த நாள்.
த்ரேதா யுகம் ஆரம்பமான நாள்
பாண்டவர்களுக்கு அட்சயபாத்திரம் கிடைத்த நாள்
குசேலர் கிருஷ்ணரை சந்த்தித்த நாள்
அண்ணா பூரணி அவதரித்த நாள்
வியாசர் மஹாபாரதம் இயற்ற ஆரம்பித்த நாள்.
கங்கை நதி பூமியை தொட்ட நாள்
வேறு என்ன வேண்டும்? நம்புவோம் வழிபடுவோம் ஐஸ்வரியத்தை பெருக்குவோம்.

Leave a comment
Upload