தொடர்கள்
பொது
பூமியில் திருமணம்..! வேற்றுக்கிரகத்தில் பிரசவம்..!!

20180312080637973.jpg

வேற்றுகிரக வாசிகளால் நமது பூமிக்கு ஆபத்து வரலாம்… அது எப்போது நிகழும் என்று குறிப்பாகச் சொல்ல முடியாது! அதற்குள் மனித இனம் அறிவியல் வளர்ச்சி மூலம் வேற்று உலகங்களில் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டால் அழிவிலிருந்து தப்பலாம்! மனிதகுலம் வேற்றுகிரகங்களுக்கும் அல்லது நட்சத்திரங்களுக்கு ஹாயாக சென்று வரும் நிலை வந்தால் மட்டுமே தற்போது வாழும் இந்த உலகத்திற்கு அழிவு ஏற்பட்டாலும் மனித குலம் அழியாமல் அழிவில் இருந்து தப்பலாம் என சிறிது நாட்களுக்கு முன்பு மரணமடைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உலகத்திற்கு சொல்லிச் சென்ற எச்சரிக்கையாகும்!

20180312080749684.jpg

ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் நம்மீது படையெடுத்தால் நம் நிலை அதோகதி தான்! அவர்களிடமிருக்கும் நவீன ஆயுதங்களை நம்மால் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தலாம் அல்லது அழித்துவிட்டுச் செல்லலாம்! வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு அடிக்கடி வந்து செல்லும் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆராயச்சி ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கிறது !.

2018031208092984.jpg

ஒரு வேளை உலகம் அழிவை நோக்கிச் சென்றால் என்ன செய்வது என்று சத்தமே இல்லாமல் ஜெர்மனி கடந்த 1988 ஆண்டு தனது நாட்டு ராக்கெட்டில் எருதின் விந்துவை வைத்து விண்வெளிக்கு அனுப்பியது. அதிலுள்ள டி.என்.ஏ. அண்டத்திலிருந்து வரும் காஸ்மிக் கதிவீச்சுகளால் பாதிக்கப்பட்டாலும் விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்றாலும் விந்துவானது சர்வசாதாரணமாக வேகமாக நீந்திச் சென்றதை அறிவியல் அறிஞர்கள் ஆய்வு முடிவாக வெளியிட்டனர்! மனித இனம் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்ய முடியமா என்ற ஆராய்ச்சிக்கு நல்ல பலனைத் தந்தது!

20180312081105645.jpg

அடுத்து அமெரிக்கா ராக்கெட்டில் விண்வெளியில் மீன் குஞ்சு பொரிக்க வைக்க 15 நாட்கள் விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது! அப்போது காஸ்மிக் கதிர்கள் தாக்கினாலும் பூமியை விட மீன்களின் இனப்பெருக்கம் வேகமாக நடந்ததை கண்டு ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் ஆழ்ந்து போனார்கள்!

அணு ஆயுத போர், மரபணு மாற்றப்பட்ட வைரஸ்களால் ஏற்படும் புதிய வியாதி, புவி வெப்பமடைவதால் இயற்கைச் சீற்றம், பூமியில் பேரழிவுகள் ஏற்படும் என நம்மை அச்சுறுத்தி வருகின்றன! மனித இனம் தொடர்ச்சியாக இயற்கைக்கு மாறாக செயல்படுவதால் வேற்றுக் கிரகங்களுக்கு மனித இனம் சென்று வாழ்வதற்கான ஆய்வுகளைச் சத்தமில்லாமல் உலக வல்லரசு நாடுகள் விண்வெளியில் மனித இனத்தினை உருவாக்க ஆராய்ச்சி நடத்தி வருகிறது!

20180312081227906.jpg

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விதைகள் முளைக்கிறதா என ஆராயும் போது, பூமியை விட வேகமாக விதைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. அப்போது தான் நாசா விஞ்ஞானிகளின் நெடு நாள் கனவான மைக்ரோ கிராவிட்டி அதாவது மிக குறைந்த ஈர்ப்பு விசையுடைய விண்வெளியில் மனித இனத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் லட்சியம்!

20180312081328732.jpg

கடந்த ஏப்ரல் 10 ந் தேதி நாசா தனது பெல்கான் 9 ராக்கெட்டில் இரு கண்டெய்னர்களில் மனித விந்து மற்றும் எருது விந்து அதிக உறைநிலைக்கு கொண்டு சென்று அதனை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்து சென்றனர்! விண்வெளியில் பூமியை விட 100 மடங்கு கதிர் வீச்சு அதிகம் அத்துடன் காஸ்மிக் கதிர்வீச்சின் தாக்கமும் அதிகம் என்பதால் இந்த விந்து அணுக்களின் டி என் ஏ வில் ஏதேனும் மாறுபாடு நிகழ்கிறதா! இந்த இரு விந்து அணுக்களின் நீச்சல் வேகம் மைக்ரோ கிராவிட்டி எப்படி நிகழ்கிறது என ஆராய்ச்சி தொடங்கினர்! அதில் பூமியைவிட விந்தணுக்களின் செயல்பாடு அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்!

20180312081616787.jpg

இதற்குமுன்பு 2017 ம் ஆண்டு இதே விண்வெளி ஆராய்ச்சியில் எலிகளின் உடம்பில் மனித விந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்த போது எலிகளின் விந்தணுக்களில் மனித விந்தின் வீரியமிக்க விந்தணுக்கள் காணப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தன. அத்துடன் பூமியில் இருந்து கொண்டு உறைநிலையில் கொண்டு செல்லப்பட்ட எலிகளின் விந்தணுக்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 9 மாதங்கள் ஆராயப்பட்டு அதன் பின் மீண்டும் பூமிக்கு கொண்டுவந்து பெண் எலிகளில் செலுத்திய போது ஆரோக்கியமான எலிகள் பிறந்தது! விண்வெளியிலுள்ள கதிர்வீச்சுகளில் எலியின் விந்தணுக்கள் உள்ள டி.என்.ஏ. பாதிக்கப்படவில்லை என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தன. இந்த சோதனை போன்றே மனித குலத்திற்கு வேற்றுக் கிரகத்தில் வாழ்வியல் சூழ்நிலை ஏற்படுத்தி ஒன்பது மாதக் கர்ப்பத்தில் குழந்தை பிறக்க புதிய வழிகிடைத்துள்ளது!

20180312081708169.jpg

அத்துடன் வேற்றுக் கிரகவாசிகள் பூமியை அழித்துவிட்டால் என்ன செய்வதென்று யோசித்த உலக விஞ்ஞானிகள் சந்திரனில் இருக்கும் மலைகளின் உள்ளே மனித விந்தணுக்களை உறைநிலைக்கு கொண்டு போய் பாதுகாத்து அங்கே மனித விந்து வங்கியைத் தொடங்கலாமா என்றும் இது வேற்றுக் கிரகவாசிகளிடமிருந்து மனித இனத்தினைப் பாதுகாக்குமா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்!

20180312081842355.jpg

20180312082123661.jpg

சீனாவும் உலக நாடுகளூக்கு எந்தவித தகவலையும் தராமல் மனித விந்தினை விண்வெளிக்கு கொண்டு சென்று வேற்று கிரகங்களில் தன் நாட்டினரை பிறக்க வைத்து வாழவைக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகின்றது!

இப்போது உலக நாடுகள் மனித இனம் விண்வெளியில் அல்லது வேற்று கிரகத்தில் செக்ஸ் வைத்தால் பூமியில் நடப்பது போன்று சுக பிரசவங்கள் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமா என்பதே ஆராய்ந்து வருகின்றனர்! அடுத்த நூற்றாண்டுகளில் பூமியில் திருமணம் செய்து வேற்று கிரகங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம் வரும்! அப்போது பூமி அழிந்தாலும் மனித குலம் வேற்றுகிரகத்தில் தழைத்தோங்கியிருக்கும்! படிப்பதற்கு இது கற்பனை காமிக் கதை போன்று இருந்தாலும் விஞ்ஞானத்தின் அபரீதமான வளர்ச்சி மனித இனத்தை காக்கும் என்ற ஸ்டீபன் ஹாக்கிங் கனவு பலிக்கும் !!

- ஆர்.ராஜேஷ் கன்னா