
"மோரை பெருக்கு நீரை சுருக்கு... நெய்யை உருக்கு பாலைக் குறுக்கு" என்பது உணவுக்கான மொழி.
பூமி வெப்பமடைந்து வரும் நிலையில், நா வறட்சி எடுக்கும்போதெல்லாம் மோரை, நீர் போல் அருந்துவது மிகவும் நல்லது என்கிறது அந்தக்கால வைத்தியமுறை.
அதிகம் புளிக்காத தயிர் 2 கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கடைந்து கொள்ளவேண்டும். இதில் துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், மாங்காய்த் தூள் (ஆம்சூர் பவுடர்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, 2 புதினா இலை, அரைத்த கருவேப்பிலை 2 டீஸ்பூன், சிறிது கருப்பு உப்பு, பெருங்காய்த்தூள் ஒரு சிட்டிகை சேருங்கள்.
குழந்தைகள் மற்றும் வளரும் மாணவர்க்கு இதனுடன் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தும் அருந்தக் கொடுக்கலாம்.
தினமும் காலை 11 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் ஒரு டம்ளர் அருந்தி வர, உடல் உஷ்ணம் நீங்கும். உஷ்ணத்தினால் வரும் நோய்கள் கிட்டே நெருங்காது. வயிற்றுப்புண் வருவதற்கும் வாய்ப்பில்லை. தாகம் எடுக்காது. வயிறு குளுகுளுவென இருக்கும்.

Leave a comment
Upload