
சீனாவில் கி.மு.206 முதல் 221 வரை முதல் பேரரசராக திகழ்ந்தவர் குயின் ஷி ஹுயாங்க். இவரது ஆட்சியில்தான், உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் முதல்கட்ட பணியைத் துவக்கி வைத்தார்.
சீனாவில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கொண்டு வந்த பேரரசர் குயின் ஷி ஹுயாங்க்கை பெருமைப்படுத்தும் வகையில், முழு உருவ வெண்கல சிலை வைக்க சீன கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்தது.
இதையடுத்து, ஷாங்டாய் மாகாணத்தில் பின்சோயு நகரில் நகரில் கடந்த 2005-ம் ஆண்டு, 62 அடி உயரத்தில் பேரரசர் குயின் ஷி ஹுயாங்க்கின் ராட்சத முழு உருவ வெண்கல சிலை நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷாங்டாங் மாகாணத்தில் பின்சோயு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பின்சோயு நகரில் இருந்த சீன பேரரசர் குயின் ஷி ஹுயாங்கின் வெண்கல சிலை அப்படியே மண்ணில் சரிந்து விழுந்தது.
இது பல்வேறு இணைய தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகப் பரவியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சீன போலீசார், அங்கு மண்ணில் உடையாமல் இருந்த சீன பேரரசரின் சிலையை கிரேன் மூலம் தூக்கி, மீண்டும் பழைய நிலையில் பொருத்தி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சீன மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
_ஸ்ரீ

Leave a comment
Upload