தொடர்கள்
தொடர்கள்
சுளீர் சொர்ணாக்கா!

20180313193253192.jpg

செய்தி: கருணாநிதி, வைகோ, ஸ்டாலின், கனிமொழி வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது!

சுளீர்: எங்க ஸ்கூல்ல கொடி ஏத்தினா மிட்டாய் தருவாங்க... அந்த வழக்கம் இங்க இல்ல போலிருக்கு என வருத்தத்துடன் திரும்பிச் சென்றாள் ஒரு சிறுமி!

செய்தி: ஒருவழியாக எதிர்ப்பை மீறி பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடக சூரப்பா பதவியேற்றார்!

சுளீர்: கூப்பாடு போட்டு தொண்டை எரிச்சலில் அவதிப்படும் அரசியல்வாதிகள் வாயில் சூரப்பா விஷயத்தில் இஞ்சிமரப்பா திணிக்கப்பட்டது!

செய்தி: புளியந்தோப்பு கர்ணன்(வயது 23), அதே பகுதி ப்ளஸ் டூ மாணவியை பெற்றோருக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மயிலாப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார்! மகளிர் காவலர்கள் கர்ணனைக் கைது செய்தனர்.

சுளீர்: ‘ப்ளஸ் டூ மாணவி ஆச்சே... ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்’ என்று கர்ணன் கதறியதைக் காவலர்கள் கண்டுகொள்ளவில்லை!

செய்தி: 3500 புத்தகங்களை தானமாக வழங்கினார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்!

சுளீர்: அதுல கையெழுத்துப் போட்ட ஒரு செக்புக் கூட இல்லியே என விரக்தியடைந்தார் அள்ளிச் சென்றவர்!

செய்தி: ராணுவக் கண்காட்சிக்கு மோடி வந்ததையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிரடி போர் சாகசம் நடத்தப்பட்டது!

சுளீர்: ‘சே! போரடிக்குதேன்னு இங்க கொஞ்ச நேரம் ஜாலியா இருக்க வந்தோம்... எங்க அமைதிய குலைக்கிற இந்தப் போர் நடவடிக்கை எங்களுக்குப் பிடிக்கலே’ என்று வெறுப்பை உமிழ்ந்தனர் படகு பின்னால் பதுங்கி உட்கார்ந்திருந்த காதலர்கள்!

- ஆதியோகி சிவா