தொடர்கள்
பொது
ஒய் வடிவ சர்வதேச விமானநிலையம்..

20180313183010882.jpg

பாகிஸ்தானின் தலைநகர்களில் ஒன்றான இஸ்லாமாபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பலகோடி மதிப்பீட்டில் பிரமாண்ட சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகள் துவங்கியது. பின்னர் பல்வேறு பிரச்னைகளை கடந்து, சடார் மற்றும் ராவல்பிண்டி ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில், தற்போது 'Y' வடிவில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த சர்வதேச விமானநிலையம் வரும் 20-ம் தேதி பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக 15 லட்சம் பயணிகள் உபயோகிக்கும் வகையிலும், பின்னர் இன்னும் சில ஆண்டுகளில் விமானநிலைய விரிவாக்க பணிகள் நிறைவடைந்ததும் சுமார் 25 லட்சம் பயணிகளுக்கு பயன்படும் வகையில் அமையும்.

இந்த 'Y' வடிவ சர்வதேச விமான நிலையம்தான், பாகிஸ்தானில் உள்ள அனைத்து விமான நிலையங்களைவிட மிக பிரமாண்டமானது என குறிப்பிடத்தக்கது.

- ஸ்ரீ