
விண்வெளியில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு, அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் ரோபோ தேனீக்களை உருவாக்கிவுள்ளது.
முன்னதாக, செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ எனும் விண்கலத்தை அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து, அறிக்கை மற்றும் படங்களை நாசா ஆய்வு மையத்துக்கு தகவல் அனுப்புவதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது. மேலும் அது மெதுவாக நகர்ந்து செல்வதால், அதிக எரிபொருளையும் எடுத்துக் கொள்கிறது. தற்போது இந்த விண்கலத்தை கைவிட நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
அதற்கு பதிலாக, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ‘மார்ஸ் பீஸ்’ எனும் ரோபோ வடிவில் 20-க்கும் மேற்பட்ட தேனீக்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தேனீயிலும் சிறிய ரக காமிரா, சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பறக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சிறிய தேனீக்களில் சிறிது நேரம்தான் சார்ஜ் இருக்கும். அதனால் அவற்றை சார்ஜ் செய்வதற்கு கூடவே ஒரு ரோவரும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தலாம். இன்னும் ஓராண்டில் செவ்வாய் கிரகத்தில் ரோபோ தேனீக்கள் பறக்க துவங்கிவிடும் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- வெங்கட்

Leave a comment
Upload