தொடர்கள்
வாசகர் மெயில்
விகடகவி - வாசகர் மெயில்!

20180314000948723.jpg

மதன் தலைமையில் வெளிவரும் ‘விகடகவி’ இதழை ஆரம்ப நாள் தொட்டு ஆழ்ந்து படித்து வருகிறேன். “20 வாரங்களும் 20 வித தித்திப்பான அனுபவங்கள் கிடைத்தன. தொடரட்டும் உங்கள் பணி இதே சிறப்புடன்.

சுரேஷ் சுப்ரமணியன், சிகாகோ.


ஒரே ஒரு குறை. சிறு கதைகளை நீங்கள் உங்கள் இதழில் இன்னும் அதிகரிக்கலாம்.

ஜி.ஏ. பிரபா, கோபிசெட்டிப்பாளையம்.


ஹாய் மதன் - வாவ்!.. எத்தனை வருடங்களாக நான் இதை மிஸ் செய்து விட்டேன் என என்னை மிகவும் ஏங்க வைத்துவிட்டது. ஒவ்வொரு பதிலிலும் அர்த்தமும் அங்கதமும் சரி பாதி பங்கு வகிக்கிறது.

வெங்கடேஷ் மகாதேவன், மயிலை.


உங்களது 108 வீணை வீடியோவிற்கு பிறகு ‘காலங்களில் அவன் வசந்தம்’ வீடியோவையும் அதிகம் ரசித்தேன். இது போல நிறைய அரிய வீடியோக்களை பதிவிடுங்கள். விகடகவி வாழ்க.

லலிதா சம்பத்குமார், பெங்களூர்.


எங்க வாத்யார் - அடேங்கப்பா!... எவ்வளவு கஷ்டப்பட்டு பத்திரிகையை உயர்த்தியிருக்கிறார்? எத்தனை பேர் வாழ்வில் அவர் ஒளி வீசியிருக்கிறார்? அற்புதம்.

எம். சிங்கமுத்து, புதுக்கோட்டை.


அலெக்ஸாண்டர் பேட்டியில் எத்தனையோ விஷயங்கள் நாட்டுக்கு தேவையான பதில்களாகவே இருந்தாலும் அவர் பதில் அளித்த தோரணையில் ஆணவம் மிஞ்சுகிறது. ஒரு டிபிகலான அதிகாரி.

எஸ். பார்கவன், அமெரிக்கா.