
உயர் அழுத்த மின் கோபுரங்களிலும், நீர் நிலைகளிலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும்மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு பறவைதான் இந்த சாம்பல் நிற கூழைக்கடா. வலசை வரும் பறவைகளில் மிகவும் பெரிதான மற்றும் அதிக எடையுள்ள ஒரு பறவை .
இந்த பறவை 150 சென்டிமீட்டர் நீள உடலும் ஆறு கிலோ எடையும் கொண்ட ஒரு பெரிய பறவை. இவைபொதுவாக அதிக நேரம் நீரில் நீந்திக்கொண்டே உணவு தேடும் இயல்புடையவை. கடந்த வருட மிச்சுங் புயலில்எண்ணூர் முகத்துவாரத்தில் இந்த பறவைகள் உணவு தேடும்பொழுது எண்ணெய் கசிந்த பகுதிகளில்கிட்டத்தட்ட 25 பறவைகள் சிக்கிக்கொண்டன. இதனால் அவற்றின் உடம்பில், குறிப்பாக சிறகுகளின் இடுக்கில்எண்ணெய் கறைகள் படிந்ததால் அவற்றால் பறக்க முடியாமல் போனது. பின்னர் அந்த பறவைகளை மீட்டுஅவற்றின் மீது படிந்திருந்த கறைகளை அகற்றிய பின் அந்த பறவைகள் அதே பகுதியில் விட்டனர் வைல்ட் லைப்டிரஸ்ட் ஆப் இந்தியாவின் பறவை இன ஆராய்ச்சியாளர்கள்.
இந்த பறவையின் அலகு 355 சென்டிமீட்டர் வரை நீளம் கொண்ட கூரிய அலகாகும். இரை பிடிப்பதற்கு கும்பலாகஅரை வட்ட வடிவில் செல்லும் இந்த பறவைகள் மீன்கள் கூட்டத்தை தங்கள் விசாலமான இறக்கைகளால் நீரில்அடித்து அடித்து ஒரு புறமாக தள்ளி விடும். பின்னர் அந்த மீன்களை உட்கொள்ளும்.
தொரப்பாக்கம் பல்லாவரம் சாலையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உயர் அழுத்த மின் கம்பிகளில்மாலை வேளைகளில் இந்த பறவை அமர்ந்துஇருப்பதை அந்த பகுதியில் செல்லும் போது காணலாம் என்கின்றனர் பறவையிலாளர்கள்.

Leave a comment
Upload