தொடர்கள்
விகடகவியார்
யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்

20260323052125507.jpg

கருத்துக்கணிப்பு

தந்தி டிவி, சாணக்கியா, தினமலர் நாளிதழ் மூன்றும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை ஐந்து முனை போட்டி.திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி, இது தவிர சசிகலா ராமதாஸ் கூட்டணி என்று களத்தில் உள்ளனர்.

தந்தி டிவியை பொருத்தவரை அவர்கள் கருத்துக் கணிப்பு மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 வரை நடந்தது

. திமுக கூட்டணி 98 தொகுதிகளில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதிமுக கூட்டணி 91 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வழக்கப்படி ஜீரோ, தமிழக வெற்றி கழகம் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும்.

இந்த இரண்டு கட்சிகளும் வாக்கு வங்கிகளை பிரித்து வெற்றி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

அவர்களின் கருத்துக் கணிப்பு படி 43 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை இந்த 43 தொகுதி தான் நிர்ணயம் செய்யும் என்பதுதான் தந்தி டிவி கணிப்பு.

தினமலர் சாணக்கியா கருத்துக்கணிப்பு

பிரபல நாளிதழ் தினமலர் சாணக்கியா இணையதளம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு சொல்வது என்னவென்றால் 4 சதவீத வித்தியாசத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதுதான்.

இன்று தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்வியுடன் அவர்கள் சர்வே செய்தார்கள். அதில் அதிமுகவுக்கு 36 சதவீதமும், திமுகவுக்கு 32 சதவீதமும், தமிழக வெற்றி கழகத்திற்கு 23 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 7 சதவீதம், மற்ற கட்சிகளுக்கு 2 சதவீதம் என்பது இவர்கள் கணிப்பு.

இவர்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 103 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 29 தொகுதியில் கடும் போட்டி இருக்கும். இந்த 29 தொகுதி தான் யார் ஆட்சி பிடிப்பார்கள் என்று தீர்மானிப்பார்கள் என்பது இவர்கள் கணிப்பு.

2021-ன் தேர்தலை விட அதிகமான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்பது ரங்கராஜ் பாண்டே கணிப்பு.

இந்தியா டுடே சீ வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி 45 சதவீதம் வாக்குகளுடன் ஆட்சியை பிடிக்கும் என்கிறார்கள்

.இதுபோல் வேறு சில கருத்துக்கணிப்புகளும் ஆரம்பத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லி இருந்தார்கள்.

தினமலர் சாணக்கியா மட்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார்கள். த

ந்தி டிவி கிட்டத்தட்ட அதை வழிமொழிகிறது. எது உண்மை என்பது மே 4-ம் தேதி தெரியும்.