
சில தினத்திற்கு முன்பு நண்பரும் மூத்த பத்திரிக்கையாளரூமான ஒருவர் நம்மிடம் பேசும் போது என் வீட்டில் என் பையன் ஒரு மாற்றத்திற்காக இந்த முறை நான் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட போகிறேன் என்றான்.
என் பேரனும் என் மனைவியும் அதைத்தான் சொன்னார்கள்.
நாங்கள் எப்போதும் திமுகவுக்கு ஓட்டு போடுவோம். இந்த முறை நான் மட்டும்தான் உதயசூரியன் பட்டனை அழுத்துவேன் போல் தெரிகிறது என்று ஆதங்கப்பட்டார்.
இன்னொரு நண்பர் எங்கள் குடியிருப்பில் இருக்கும் சிறுவர் சிறுமிகள்" ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி, டி வி கே ஒரு நல்ல சக்தி என்று சொல்லி விசில் அடித்தபடி விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள்.
விஜய் தனது பரப்புரையின் போது ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறான் அவர்கள் தாத்தா, பாட்டி, அக்கா, அப்பா அம்மம்மா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பாவை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி பேசுவார்கள் என்று பேசினார்.
என் பிரச்சாரத்தை நீங்கள் தடுக்கிறீர்கள் நான் வேற வகையில் பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டேன் என்றும் சொன்னார். அது ஒரு வேலை இந்த வகை தானோ என்னவோ யார் கண்டது ?
தமிழ்நாட்டில் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல் முறை வாக்காளர்கள்.
இவர்கள் பெரும்பாலோர் இந்த முறை விசில் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என்கிறார்கள் சில கணிப்பாளர்கள். 25 வயது முதல் 40 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம்.
இவர்களும் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்று விஜய் நம்புகிறார்.
விஜயை பொறுத்தவரை அவருக்கு வரும் கூட்டம் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல, அது பெரும்பாலும் தானாக சேர்ந்த கூட்டம்.
அவரைப் பொறுத்தவரை திமுக தான் ஆட்சியில் இருக்கிறது அவர்களை இறக்க வேண்டும் என்றால் அவர்களை குறி வைத்து தாக்க வேண்டும் என்பதுதான் அவர் இலக்காக இருக்கிறது.
.ஸ்டாலின் சா....ர் ஸ்டாலின் சார்..... என்று சொல்லி அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு திமுகவால் பதில் சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.
நடிகர் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விஜயை திறந்த வெளியில் விமர்சித்து வருகிறார்,
அவர் மகன் சிபிராஜ் 'ஒரு குட்டி லெட்டர் 'என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் 'அன்புள்ள விஜய் அண்ணா 1993 அக்டோபர் 3-ஆம் தேதி பொள்ளாச்சியில் ஒரு நிகழ்வில் உங்களை முதல் முதலில் பார்த்தேன்.
அப்போது அமைதியாக இருந்த அந்த இளைஞர் பின்னாளில் கோடிக்கணக்கான இதயங்களை கைப்பற்றி ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று நான் நினைத்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ள சிபி சக்கரவர்த்தி இறுதியாக "வெற்றி பெற்று வா தலைவா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என உற்சாகமாக தனது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சத்யராஜ் குடும்பத்திலேயே ஒரு ஓட்டு உதயசூரியனுக்கு இல்லை என்று முடிவாகிவிட்டது.
இப்படி நிறைய சிபிராஜ்கள் பல குடும்பங்களில் உள்ளார்கள் என்ற நம்பிக்கையில் தான் வீட்டு வாசலில் விசில் கோலங்கள் போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார் விஜய்.

Leave a comment
Upload