
தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி.

தன்னலம் கருதாத தமிழ்நாட்டை ஆண்ட தலைவர்கள் எல்லாம் இப்போது மிஸ்ஸிங்.
புதிய தலைமுறையினர் தன்னலமிக்க அரசியல் தலைவர்களையும் ஊழல் வாதிகளையும் மட்டுமே பார்த்து வருவது காலத்தின் கொடுமை.
தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ப்ராண்டட் அரசியல் தலைவர்கள் என்ற வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
திமுக வின் கடந்தாண்டு ஆட்சியில் கஞ்சா மற்றும் பாலியியல் வன்முறை தான்முக்கிய குற்றச்சாட்டு என கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரேமலதா சேலத்தில் பேசியது அவரது மனசாட்சி ..!
திமுக தலைமை அப்செட் ஆனாலும் ஜால்ரா அடிக்காமல் இருப்பதை அப்படியே பேசினார் பிரேமலதா என்று கிச்சன் கேபினெட்டில் பேசியதாக தகவல் .

தமிழர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பொன்னேரி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஞ்ச் டயலாக் பேசினார்.இதனால் டென்ஷனில் திமுக தலைமை இருப்பதாக தகவல்.
எடப்பாடியும் , ஸ்டாலினும் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று மூச்சு முட்ட பேசினாலும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் முகம் சுளிக்கும் சப்ஜெக்ட் பேசி வாக்காளர்களை ஏமாற்றி விட்டனர்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சி நன்றாக இருந்திருந்தால் எந்த இலவசமும் இவ்வளவு மீடியா விளம்பரமும் தேவையில்லை ,பாமரமக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் ஆனால் முழுக்க மீடியா விளம்பரத்தையும் , முதல்வரின் குடும்பமும் களத்தில் இறங்கி முக்கிய நபர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர் என்று திமுக தலைமையை சீமான் கேலி செய்கிறார்.
திமுக தலைவரின் மாப்பிள்ளை சார் புதிய வியூகம் அமைத்து எப்படியாவது திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று இவரும் களத்தில் இறங்கி அதிரடி மூவ்களை நகர்த்தி வருகிறார்.

திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை இதனை உடைத்து சாதனை படைப்பேன் என்று ஸ்டாலின் ரோட் ஷோ மற்றும் டீ கடையில் டீ குடித்து கொண்டும் ,வஞ்சிரம் மீன் வறுவல் சாப்பிடும் போட்டோக்கள் வைரல் ஆகிவிட்டது.
ஸ்டாலின் ஆட்சி கடந்தாண்டு 5 ஆண்டுகளில் தகுதியுள்ள மகளிருக்கு ரு1000 வழங்கியதும் மற்றவர்களுக்கு இந்த தொகை கிடைக்காமல் போனதும் திமுக விற்கு வாக்குகள் சிதற கூடும் .
பேரிடர் பாதிப்பில் பயிர் இன்சூரன்ஸ் எடப்பாடி ஆட்சி காலத்தில் வந்தது போல் ஸ்டாலின் அரசில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் இருக்கிறது.
அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்ற கோபம் திமுக எதிராக இருக்கிறது.
பல நகராட்சிகள் சரிவர அடிப்படை வசதிகளை செய்யாமல் வரியை கூட்டி மக்களை வாட்டி வதைத்து அடிப்படை தேவைகளை சரி வர செய்யவில்லை என்ற குற்றசாட்டும் திமுக மேல் ஏறி சவாரி செய்கிறது.
இப்படி திமுக விற்கு மக்கள் இடையே பெருத்த ஏமாற்றம் இதனை மீடியாக்கள் சொல்வதில்லை , காரணம் எல்லாம் விளம்பர வருமானம் தான் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர்.
தமிழகத்தில் தற்போது வேட்பாளர்களாக நிற்கும் பலர் பல கோடி சொத்துக்கள் உள்ள வேட்பாளர்கள் , கல்வி தந்தை . தொழிலதிபர்கள், குடும்ப அரசியல் , வாரிசு அரசியல் செய்யும் குறுநில மன்னர்கள் .இவர்கள் தொகுதியில் விட்டமின் ப வினை தாராளமாக இறைத்து வருகின்றனர்.
ஜோசப் விஜய் தற்போது திமுக ,அதிமுக தலைமைக்கு சிம்ம சொப்பனமாக வாக்குகளை பிரிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்
சென்னையின் பிரதான 10 தொகுதிகள் விஜய் வருகையால் திமுகவின் கையை விட்டு நழுவுகிறது என்ற தகவல் கேட்டு திமுக தலைமை ஆடித்தான் போயிருக்கிறது .
தமிழகமெங்கும் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சிக்காரர்களை தவிர பொதுமக்கள் அவ்வளவாக கூடுவதில்லை.

திமுக தலைமை கிச்சன் கேபினட் பிரமுகர்கள் டெல்லி ஆளும் கட்சியின் பவர்ஃபுல் அமைச்சர் மற்றும் தலைவருடன் தொழில் ரீதியான ஒப்பந்தம் ஏற்பட்டு எப்படியும் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற பணியினை திமுக வின் தலைமை மாப்பிள்ளை சார் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழக வாக்காளர்கள் துணை முதல்வர் உதயநிதியின் பேச்சை இந்த தடவை வாக்காளர்கள் ரசிக்கவில்லை. ஒரு போட்டோவை வைத்து எடப்பாடியை கலாய்த்த உதயநிதியை எடப்பாடி பதிலடி கொடுத்த பிறகு உதயநிதி சுரத்து குறைந்துவிட்டது.
கிட்டத்தட்ட தமிழக மக்களின் மனநிலையை திமுகவின் தலைமை கிச்சன் கேபினட் மோப்பம் பிடித்து விட்டது.
விட்டமின் ப வை இரைக்க மாப்பிள்ளை சார் உத்தரவிட்டு சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்.
அதிமுக தலைமையில் சென்ற வாரம் வரை சுருதி குறைவாக இருந்த தேர்தல் பிரச்சாரம் இப்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒரு எம் எல் ஏ வேட்பாளர் பிரதான கட்சி சார்பாக ரூபாய் 25 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் 210 தொகுதிகள், எடப்பாடி 200 தொகுதிகள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பேன் என்கிறார்கள்
அரசியலுக்கு நல்லவர்கள், நேர்மையாளர்கள் வரலாம் என்ற நிலை மாறிவிட்டது.
குறுநில மன்னர்கள் தான் தற்போதைய பெரும் பகுதியான வேட்பாளர்கள்.
எவ்வளவு கோடி செலவழித்து மீண்டும் தங்கள் முதலீடுகளை பெருக்கி கொள்ளும் மன்னர்கள் தான் அடுத்த ஐந்தாண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி மந்திரி முதல் முதல் மந்திரி வரை இருக்க போகிறார்கள் .
20 நாட்கள் சூரிய பகவான் காட்டிய தீட்சயண்த்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட மன்னர்கள் அடுத்து ஏசி அறையில் 5 வருடங்கள் ஹாயாக சொத்து குவிப்பார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.

2026 முதல் 2031 வரை தமிழகத்தின் அடுத்த மன்னர் யார் என்ற கேள்வி மே 4 தேதி தெரியும்.
போடுங்கமா ஓட்டு காதில் ரீங்காரமிட்டு செல்கிறது.

Leave a comment
Upload