தொடர்கள்
ஆன்மீகம்
தாயாரின் ஆசைக்கு விஜய் கட்டிய சாய்பாபா கோயில்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

20260321090545817.jpeg

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய் தாயின் மீது மிகவும் அன்பு கொண்டவர்.

தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் வகையில், விஜய் கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் 'சாயி மந்திர்' என்ற பெயரில் சாய்பாபாவுக்குக் கோயில் ஒன்றைக் கட்டி முடித்து 2024 ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.

கோயில் சுமார் 8 கிரவுண்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டு, மும்பை ஷீரடி சாய்பாபா கோயிலைப் போலவே இக்கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Vijay built the Sai Baba temple as per his mother's wish..!!

குடும்பச் சூழல், கட்சி மற்றும் சினிமா என வெவ்வேறு தரப்புகளில் தனக்கு அசம்பாவிதம் நடக்கா வண்ணம் இருக்கவும், அரசியலில் ஜெயித்து வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலின் காரணமாகத் தான் விஜய் இந்த கோயிலைக் கட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடிக்கடி சீரடி சென்று வரும் விஜய் தற்போது கொரட்டூரில் இருக்கும் அவரது சாய்பாபா கோயிலுக்கும் வந்து வழிபட்டுச் செல்கிறார்.

Vijay built the Sai Baba temple as per his mother's wish..!!

விஜய் ஒரு கிறிஸ்தவராக இருந்த போதிலும் சாய்பாபாவுக்குக் கோயில் கட்டும் எண்ணம் வந்ததற்குக் காரணம் குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகர் "வெகு நாளாகவே விஜயிடம் நமது இடத்தில் சாய் பாபா கோயில் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில், விஜய் இந்த கோயிலைக் கட்டியுள்ளார். நானும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Vijay built the Sai Baba temple as per his mother's wish..!!

இந்தக் கோயிலில் சாய்பாபா, அனுமன் மற்றும் விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

இந்த கோயில் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணிவரை திறந்திருக்கும்.

தினந்தோறும் அன்னதானமும் நடக்கின்றது.

வியாழக்கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து வழிபடுவதால் ஆலயத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Vijay built the Sai Baba temple as per his mother's wish..!!

Vijay built the Sai Baba temple as per his mother's wish..!!