தொடர்கள்
விகடகவியார்
எடப்பாடி தொகுதி நிலவரம்

20260323054412863.jpg

எடப்பாடி தொகுதியில் 5 முறை வென்று, 2 இரண்டு முறை வெற்றி வாய்ப்பை தவறவிட்ட எடப்பாடி பழனிச்சாமி எட்டாவது முறையாக தற்சமயம் போட்டி போடுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் முதல்வர் என்ற பொறுப்புகளில் இருந்ததால் எடப்பாடி தொகுதி தனி கவனம் பெற்றது.

இந்த முறை எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் பேரூராட்சித் தலைவராக 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்.

இந்த தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக அவரது மனைவியை நிறுத்தி இருந்தார் வேட்பாளர். வேட்பு மனு சரிவர நிரப்பப் படவில்லை, இன்னும் சில காரணங்களால் அவர்கள் இருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனு சரி செய்து தர தேர்தல் அதிகாரி தொடர்பு கொண்ட போது அவர்கள் இருவருமே தொடர்பு எல்லையில் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி தனது வெற்றி வாக்கு வித்தியாசம் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரால் குறையுமோ என்று பயந்து போய் அவரை விலைக்கு வாங்கி விட்டார் என்பதுதான் பரவலான பேச்சு.

வேட்பாளர் வாபஸ் பின்னணியில் அதிமுக இருப்பதாக தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருக்கிறார்.

எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாருக்கு தமிழக வெற்றி கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சின்னத்தில் வாக்களிக்குமாறு விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் எடப்பாடி தொகுதி உள்பட 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

பாராளுமன்ற தேர்தலில் சேலம் எம்பி பதவியை திமுக கைப்பற்றியது.

டி.எம்.செல்வகணபதி வெற்றி பெற்றார்.

இவரும் ஒரு முன்னாள் அதிமுக தலைவர் தான் என்பதை கவனிக்க வேண்டும். இந்த முறை சேலத்தை தனது கோட்டையாக மாற்ற திமுக எல்லாம் முயற்சியும் செய்கிறது.

எடப்பாடி பாஜக அடிமை அதிமுகவை அடமானம் வைத்து விட்டார். விவசாயிகள் துரோகி என்றெல்லாம் எடப்பாடி தொகுதிக்கு வந்து எடப்பாடி போட்டு தாக்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

எடப்பாடியின் செல்வாக்கு அந்தத் தொகுதியில் குறையவில்லை அப்படியே இருக்கிறது .