
தமிழக சட்டசபை வேட்பாளர்கள் பெரும்பாலும் தேர்தலுக்கு முன்பு அல்லது பதவியேற்பதற்கு முன்பாக தங்களின் பூர்வீகக் குலதெய்வ கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இவர்கள் கட்சி பிரசாரத்துக்குச் செல்வதைவிடக் குலதெய்வ கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சென்றுவருகிறார்கள். வேட்பாளர்களில் நாத்திகம் பேசுபவர்களும் தேர்தலுக்கு முன்பு தங்களின் இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் வணங்கிப் பரப்புரை தொடங்குவார்கள்.
தமிழ்நாட்டின் பிரபல வேட்பாளர்களின் குலதெய்வ கோயில்கள்:

மு.க.ஸ்டாலின் (தி.மு.க) கொளத்தூர் தொகுதி
நாகப்பட்டினம் மாவட்டம் - திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில்
எடப்பாடி பழனிசாமி (அ.இ.அ.தி.மு.க) எடப்பாடி தொகுதி
ஈரோடு மாவட்டம் - சிலுவம்பாளையம் அருகே உள்ள அப்பாத்தாள் கோயில்
சீமான் (நா.த.க) காரைக்குடி தொகுதி
சிவகங்கை மாவட்டம் - முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவில்
விஜய் (தவெக) பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி
விஜய் ஒரு கிறிஸ்தவராக இருந்த போதிலும் தனது மத அடையாளத்தைத் தாண்டி, சீரடி சாய்பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர்
நயினார் நாகேந்திரன் (பாஜக) சாத்தூர் தொகுதி
கன்னியாகுமரி மாவட்டம் - தண்டையார்குளம் இசக்கியம்மன் திருக்கோயில்
ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க) போடிநாயக்கனூர் தொகுதி
விருதுநகர் மாவட்டம் - செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயில்
தமிழிசை சௌந்தராஜன்(பிஜேபி) மயிலாப்பூர் தொகுதி
திருப்பூர் மாவட்டம்- பெருமாநல்லூரில் உள்ள பெரியசாமி கோயில்
பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க) விருத்தாசலம் தொகுதி
மதுரை மாவட்டம் - திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் வீரசின்னம்மாள் கோயில்.
எல். முருகன்(பிஜேபி) அவினாசி தொகுதி
நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் அருகே கோனூரில் நந்தகோபால சுவாமி கோயில்
வானதி சீனிவாசன்(பிஜேபி) கோவை வடக்கு தொகுதி
கோயம்புத்தூர் மாவட்டம்- வெள்ளகிணறு பத்ரகாளியம்மன் கோயில்.

டி.டி.வி. தினகரன்(அ.ம.மு.க) பொதுச்செயலாளர்
திருவாரூர் மாவட்டம் - தட்டான்கோவில் கிராமத்தில் உள்ள வீரமணவாளசாமி கோவில்.
தொல்.திருமாவளவன் (விசிக) தலைவர்
அரியலூர் மாவட்டம் - செந்துறை அருகே உள்ள அங்கனூர் மாயவன் திருக்கோயில்.
அன்புமணி ராமதாஸ் (பாமக) தலைவர்
விழுப்புரம் மாவட்டம் - நல்லாவூரில் உள்ள ஐயனாரப்பன் கோயில்
ஜி.கே.வாசன் (தமாகா) தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள்கோயில்.
வி.கே. சசிகலா(அஇபுதமமுக) தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம் - விளார் கிராமத்தில் உள்ள வீரனார், மதுரை வீரன் கோயில்.


Leave a comment
Upload