தொடர்கள்
அரசியல்
பெண்களுக்கென ஒரு குரல் மரியா சிவானந்தம்

20260322214442905.jpg

தேர்தல் களத்தில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் தினமும் மேடையேறிக் கொண்டு இருந்தன.

வாக்குறுதிகளும், தாக்குதல்களும் , கணிப்புகளும,சாதனைகளின் பட்டியலும் என்று அரசியல் களம் அதகளம் ஆகி வருகிறது

இந்நாட்களில். தொலைக்காட்சி செய்தித்தாள், முகநூல், இன்ஸ்டா , யூட்யூப்,வலைத்தளங்கள் எல்லாமே தேர்தல் ஜுரத்தில் இருப்பதை உணர முடிகிறது. இளையவர் முதல் முதியோர் வரை இப்போது களம் காணும் வாக்காளர்களைப் பற்றி விவாதிப்பதை காண முடிகிறது .

பதட்டம் நிறைந்த இச்சூழலில் கூட்டணி கட்சிகள் தமக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டது போலவே , பரப்புரைகளை நிகழ்த்தி வந்தன .

ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தலைவர் பிரேமலதா மக்களின் மனதில் இருக்கும் உறுத்தலை வெளிப்படையாக திமுக பிரசார கூட்டத்திலேயே பேசி உள்ளார் .

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் "முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வந்துள்ளார் , ஆனால் ஒரு விஷயம்" என்று சொல்லி ,பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை பற்றியும், பெருகி வரும் போதை வழக்கங்கள் பற்றியும் அப்பரப்புரை கூட்டத்தில் பேசினார்., அங்கே இருந்த திமுக தலைவர்கள் முகம் சுளித்தாலும் அவர் துணிவாக பேசி உள்ளார்

தொடர்ந்து , "இந்த ஆட்சி தொடர்ந்தால் தலைவர் ஸ்டாலின் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகாமல் நடவடிக்கை எடுப்பார் என்றும் அதற்கு பக்கபலமாக நான் இருப்பேன்" என்றும் கூறினார் , உள்ளதை உள்ளபடி கூறியுள்ள அவரது இந்த துணிச்சல் பாராட்டுக்குரியது .

இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த இரண்டு தீமைகளை தமிழ் மண்ணில் இருந்து அகற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

பெண்களுக்கான பிரேமலதா அவர்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்