தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை - நீல கோழி  ப ஒப்பிலி

20250208075410666.jpg

ஊதா நிறத்தில் உள்ள ஒரு விசித்திரமான சற்றே விகாரமான பறவை இந்த நீல கோழி என கூறி இருக்கிறார் பறவைகள் ஆராய்ச்சியின் தந்தை சலீம் அலி அவர்கள். சிவந்த கால்கள், மற்றும் பாதங்கள். சிவந்த வழுக்கை போன்ற நெத்தி மற்றும் அடர்ந்த சிவந்த அலகுகள் இதுவே இந்த பறவையின் அடையாளம்.

சதுப்பு நில பகுதிகளில் உள்ள நாணல் படுகைகளில் காணப்படும் ஒரு கோழியினம் இது. இந்த பறவையின் பிரதான உணவு காய்கறி சார்ந்த உணவுவகைகள், புழு, பூச்சிகள், மற்றும் மெல்லுடலிகள்.

நாணல் படுகைகளின் ஊடாக ஆடி வாலை அசைத்து அசைத்து செல்லும் இந்த நீல கோழி. உரத்த கூச்சலுடன் கூக்குரலிடுவது போல இருக்கும் இந்த பறவையின் சத்தம். குறிப்பாக இனப்பெருக்க காலங்களில் இந்த பறவையின் சத்தம் அதிகம் இருக்கும் என்கிறார் சலீம் அலி.

ஆண் பறவை ஒரு காதலில் விழுந்த இளைஞனை போல, தண்டுகளை தன் அலகுகளில் கவ்விக்கொண்டு தலை கவிழ்ந்து பெட்டையை வசீகரிக்கும் வழக்கம் கொண்டது இந்த நீல கோழி. ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்த பறவையின் இனப்பெருக்க காலம் ஆகும். சதுப்பு நில நாணல் புதர்களில் நாணல்களை பிணைத்து கூடு கட்டும். அந்த கூடும் தண்ணீர் மட்டத்திற்க்கு சிறிது மேலே இருக்கும்படி கட்டும் இந்த பறவை. ஒரு சமயத்தில் மூன்றிலிருந்து ஏழு முட்டைகள் வரை ஈனும் தன்மை கொண்டது.