சூர்யா ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நடிகர் நடிகைகளின் விவாகரத்து தற்சமயம் பேசும் பொருளாக இருந்தாலும் இந்த தம்பதிகள் இன்று வரை ஒற்றுமையாக குடும்பம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
தற்சமயம் தனது வாரிசுகள் படிப்புக்காக இந்த ஜோடி மும்பைக்கு குடியேறிவிட்டது. இருந்தாலும் படப்பிடிப்புக்காக அடிக்கடி சென்னை வந்து போகிறார் சூர்யா. ஜோதிகா இந்தி படம் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்துகிறார். இந்த ஜோடி சமீபத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இயற்கை காட்சிகளுடன் ரம்யமாக ஷெஷல் தீவுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு கொண்டாட சென்றிருக்கிறார்கள்.
அங்குள்ள அழகான கடற்கரைகள், மலைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் இந்த ஜோடி ரொமான்ஸ் செய்யும் படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் சூர்யாவை குறிப்பிட்டு, "சொர்க்கத்தில் உங்களுக்கும் எனக்கும் இன்னொரு நாள் "என்று குறிப்பிட்டு இருக்கிறார் நடிகை ஜோதிகா. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் நல்ல அழகான ஜோடி, பெஸ்ட் ஜோடி, விண்டேஜ் சூர்யா ஜோதிகா என்றெல்லாம் குஷியாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்சமயம் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி படத்தில் நடித்து வருகிறார். தாபா கார்டெல் படத்தை தொடர்ந்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கி வரும் படத்தில் தற்சமயம் ஜோதிகா நடித்து வருகிறார். இருவருமே 40 கடந்து 50 தொட இருக்கும் தம்பதிகள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள்.
Leave a comment
Upload