திரிஷா
தக்கலைப் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை திரிஷா கண்டு கொள்ளவில்லை. இப்போது சூர்யாவுடன் திரிஷா கருப்பு படத்தில் நடித்து வருகிறார். "இந்தப் படம் ஹிட்டானால் முந்தைய தோல்வி மறந்து விடும், இங்கே வெற்றி மட்டும் பேசப்படும்" என்று தத்துவம் சொல்கிறார் நடிகை.
பறந்து போ
ராம் இயக்கத்தில் சிவா அஞ்சலி நடித்த படம் பறந்து போ. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடல்களே இந்த படம். குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்.
கியாரா அத்வானி
டாக்ஸிக் படத்தில் யாஷ்ஷுடன் நடித்து வருகிறார் கியாரா அத்வானி. அவர் கர்ப்பமாக இருக்கும் போது அவர் பறந்து வந்து நடிப்பதை பார்த்த யாஷ், கியாராவுக்கு வசதியாக படப்பிடிப்பை மும்பைக்கு மாற்ற சொல்லிவிட்டார். இப்போது மும்பையில் செட் அமைத்து படமாக்கிக் கொண்டிருக்கிறது பட குழு.
ரித்திகாசிங்
பல படங்களில் நடித்தாலும் இன்னும் பெரிய வெற்றி கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் ரித்திகா சிங். இதனால் குட்டி ஆடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அவற்றை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
ஓட்டம்
போதைப் பழக்கம் தொடர்பாக கோலிவுட் மீது காக்கி வட்டாரம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால் யார் பார்ட்டிக்கு கூப்பிட்டாலும் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் இப்போது பார்ட்டி என்றாலே ஓட்டம் பிடிக்கிறார்கள்.
கில்லர்
2015-க்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் படம் கில்லர். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி ப்ரீத்தி அஸ்ரானி. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.
பசங்க ஹீரோ
கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் பசங்க படத்தில் ஜீவாவாக பிரபலமானவர் ஸ்ரீராம். இந்நிலையில் இவர் தனது காதலியான நிகில் பிரியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஸ்ரீராம் தற்போது பயோ டெக் கம்பெனி நடத்தி வருகிறார். அங்குதான் நிகில் பிரியாவுடன் காதல் ஆரம்பமானது.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா அடுத்ததாக நடிக்க உள்ள படம் ' உள்ளமைசா' படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஷ்மிகா மூக்குத்தி அணிந்து, கையில் கத்தி, கண்களில் கோபம் என மிரட்டலாக இருக்கிறார். இந்த போஸ்டரை வெளியிட்ட நடிகை ரஷ்மிகா ' எப்போதும் புதிதாக வித்தியாசமாக சுவாரஸ்யமாக ஏதாவது ஒன்றை உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன் இதுவும் அப்படி பட்ட முயற்சி தான் ' என்று பதிவிட்டு இருக்கிறார்.
தலைவன்-தலைவி
விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிக்கும் தலைவன் தலைவி படம் ஜூலை 25-ஆம் தேதி ரிலீஸ். சமீப காலமாக விஜய் சேதுபதி நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதால் இந்த படத்தை தான் அவர் பெரிதாக நம்புகிறார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள படத்தில் கழுத்தில் தாலி இல்லை. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் போன ஆண்டுதான் கல்யாணம் ஆச்சு தாலி எங்கே என்று கேள்வி கேட்கிறார்கள்.
Leave a comment
Upload