தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250603214224304.jpeg

எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது எடப்பாடி.

இத ஒரு வாட்டி அமித்ஷா பக்கத்துல வச்சு சொல்லி பாருங்க.

கடமை தவறாமல் சுதந்திரமாக செயல்படுங்கள் போலீசுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

சுதந்திரம்ன்னு சொல்றீங்களே அது எங்க இருக்கு ?

வெவ்வேறு இடங்களில் இரண்டு வாலிபர்கள் கொலை திருவண்ணாமலையில் இரவில் பதட்டம்.

கம்முனு இருங்க தமிழ்நாடு அமைதி பூங்கா என்று ஊர் பூரா சொல்லிக்கிட்டு இருக்கோம் !!

போலீசே ஆனாலும் தண்டனை உறுதி முதல்வர் எச்சரிக்கை.

ஆமா இப்ப நீங்க ஆளுங்கட்சி இப்படித்தான் சொல்லணும் !!

கர்நாடக காங்கிரசில் மோதல் இல்லை சித்தராமையா திட்டவட்டம்.

இதை அப்படியே துணை முதல்வர் கொஞ்சம் சொல்ல சொல்லுங்க பாக்கலாம் ?

ஜூலை ஏழு 'மக்களை காப்போம் ; தமிழகத்தை மீட்போம் 'தேர்தல் சுற்றுப்பயணம் பழனிச்சாமி துவக்கம்.

கட்சியை காப்போம்னு தானே இருக்கணும் ?

இந்திக்கு எதிராக உத்தவ், ராஜ் தாக்கரே ஜூலை 5ல் ஒன்றிணைந்து போராட்டம்.

பாவம் இந்தி நேரம் சரியில்ல போல தெரியுது ?

அன்புமணி டெல்லி பயணம் தேர்தல் கமிஷனில் முறையீடு.

அப்படியே அமித்ஷாவையும் பார்த்து பேசிட்டு போவார் அப்படித்தானே ?

இரட்டை இலக்கத்தில் சீட் கேட்கவே இல்லை திமுக கூட்டணியில் தொடர்வதாக வைகோ தகவல்.

ஒரு காலத்தில் திமுகவின் போர்வாள் என்று சொன்னாங்க இவரை !!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது மின்சாரா துறை அமைச்சர் திட்டவட்டம்.

ஆமா அடுத்த வருஷம் தேர்தல் வருது இல்ல !!

ஒரே அணியில் பாமக விடுதலை சிறுத்தைகள் இருக்கணும் செல்வப் பெருந்தகை கருத்து.

பாமகவுல ரெண்டு பாமக இருக்கு எந்த பாமகவை சொல்றாரு இவரு ?