தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

திரிஷா20260617151248767.jpg

திரிஷா செல்லமாக வளர்த்து வரும் 'இஸ்ஸி' நாய் விஷ்ணு விஷால் வளர்க்கும் 'டெடி 'என்ற நாயின் குட்டி. இது 'பூடில்' வகை நாயாம்.

ஜோதிகா

20260617151919677.jpg

'சிஸ்டம்' படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா,அப்படத்திற்காக ஐகானிக் கோல்ட் விருது வாங்கியுள்ளார்.விழாவிற்கு ஸ்லிம் ஆடையுடன்வந்து பார்வையாளர்கள் ஜொள்ளுவிட வைத்து விட்டார் அம்மணி.

காயடுலோஹர்.

காயடு லோஹர் வசம் 7 தமிழ் படங்கள் இருக்கின்றன நான் இப்ப ரொம்ப பிசி என்று சந்தோஷமாக இருக்கிறார்.

பார்வதி

20260617151948506.jpg

" ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது பெரிய விஷயம் .அதைவிட பெரிய விஷயம் அதை சரியாக வளர்ப்பது. அந்தப் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. அம்மாவாகாமல் இருப்பதுதான் என்னுடைய தாய்மை " என்று நடிகை பார்வதி பேசியது இணையத்தில் சூடான விவாதத்தை கிளப்பி இருக்கிறது

ஐஸ்வர்யா லட்சுமி

20260617152424121.jpg

'கட்டாகுஸ்தி2 ' படம் ஐஸ்வர்யா லட்சுமி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்? இந்தப் படத்தில் ஒரு குழந்தையுடன் நடித்த போது, என்னுள் இருந்த தாய்மை உணர்வு விழித்தெழுந்தது.திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன். என் வாழ்க்கைத் துணையாக வருபவர் நல்ல கணவராக மட்டுமல்ல, என் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் இருக்க வேண்டும் " என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி

ட்ரெய்ன்

20260617155919150.jpg

கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெய்ன் படம் முடிவடைந்து சில ஆண்டுகளாகியும் வெளியாகாமல் இருந்தது. இப்போ இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. எனவே சீக்கிரம் ரிலீஸ் ஆகும் போல தெரிகிறது. இந்தப் படத்துக்கு இசையும் மிஷ்கின்தான்.இந்தப் படத்தில் பிரபல மாடல் ஐரா தயானந்த் நாயகியாக நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடி கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

ஜேசன் சஞ்சய்

20260617154757489.jpg

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ' சிக்மா ' வரும் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக விஜயின் ஜனநாயகன் படம் வெளியானால் 'சிக்மா' ரிலீஸ் தள்ளி போகுமாம் .இந்நிலையில் ஜேசன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக போகிறார். லைக்காவிலிருந்த தமிழ் குமரன் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். அவர் தயாரிக்கும் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம்.

ரஜினிகாந்த்

20260617154159843.jpg

'ஜெயிலர் 2 'திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் உள்ள ஒரு பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் நடத்துவது பற்றி சன் பிக்சர்ஸ் யோசித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் விளம்பரம் கிடைக்கும். மலேசியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதால் தான் இந்த யோசனையாம்.

ஸ்ருதிஹாசன்

20260617153106337.jpg

சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இனிமேல் தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்த திட்டம்.

ஹீமா குரேஷி

20260617153736608.jpg

இந்தி மற்றும் தென்னிநதிய மொழி படங்கள் நடிக்கும் ஹீமா குரேஷி' பேபி டூ டைடூ' என்றஹிந்தி படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத ஒப்பந்த கொலையாளியாக நடித்திருக்கிறார். "சக்தி வாய்ந்தவர்களாக காட்டப்படுவதற்கு பெண்களை கவர்ச்சிப் பொருளாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை அவர்களை இயல்பாகவே காட்டலாம்" என்கிறார் நடிகை.

சமந்தா

சமந்தா நடித்த எங்கள் தங்கம் படத்தை இரண்டாம் தர தியேட்டர் முதலாளி அவர் தியேட்டரில் வெளியிட கேட்டபோது "ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவாங்க?நடிகையின் கவர்ச்சி தான் பேசப்படும்.நடிப்பு பெரிய அளவில் பேசப்படாதே என்று அந்த முதலாளி பேசியதை போனில் கேட்டுக் கொண்டிருந்தார் சமந்தா. இப்போது எங்கள் தங்கம் படம் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. "இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர திரையரங்குகளில் ஹீரோயினி படங்கள் பற்றி கேட்டால்நோ சொல்லக்கூடாது பார்க்கலாமே! என்று சொல்லி பழகுங்கள் " என்று சொல்லி இருக்கிறார் நடிகை சமந்தா.