
கரூரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், உட்பட நான்கு கோயில்களின் ரூபாய் 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 85 ஏக்கர் நிலம் ஒன்பதாம் தேதி காலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு, அதை இந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் ஏற்று அதே நாளில் பட்டா போட்டு கொடுத்துள்ளார்.
சாதாரண பொது ஜனம் பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் சென்றால் அங்கே இங்கே என்று அலைக்கழித்து லஞ்சம் வாங்கிக் கொண்டு பல நாட்களுக்குப் பிறகு பட்டா வழங்குவார்கள்.
.ஆட்சியர் அலுவலகத்தில் பரிந்துரை அதை ஏற்று இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் உத்தரவு அதே நாளில் பட்டா இப்படி ஒரே நாளில் நடந்திருப்பதற்கு காரணம். மறுநாள் முதல்வர் விஜய் கரூர் வருகிறார்.
விரைவில் கரூரில் இடைத்தேர்தல் நடக்கப் போகிறது என்பது தான். இந்த ஒரே நாள் உத்தரவு மூலம் 700 பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கோயில் பெயரில் இருந்தது. இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் ஆன்மீக பக்தர்கள் கோயிலில் தூய்மை பணி, அன்னதானம், நந்தவனம் பராமரித்தல் உள்ளிட்ட பல சேவைக்காக இந்தக் கோயில்களுக்கு இந்த சொத்துக்களை தானமாக வழங்கி இருக்கிறார்கள்.
இந்த சொத்துக்களை பராமரித்து வரும் அறநிலைத்துறை, அந்த சொத்துக்களை வரன்முறைப் வாடகை மற்றும் குத்தகைக்கு விடலாம்.
இந்த சொத்துக்களை மற்றவருக்கு உரிமை வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. ஆனால், நீண்ட காலமாக இந்த சொத்துக்களில் வசித்து வருபவர்கள் அனுபவ பாத்தியதை குறிப்பிட்டு இது எங்கள் நிலம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
இப்படி பல கோயில்கள் சொந்தமான நிலங்களில் வசிப்பவர்கள் நிலத்தை எங்கள் பெயருக்கு மாற்றித் தாருங்கள் என்று நீதிமன்றங்களில் பல கோயில்கள் சம்பந்தமான இடங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
சில கோயில்களில் ஆளுங்கட்சியின் தலையீடு லஞ்சம் காரணமாக கோயில் சொத்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு கைமாறி இருக்கிறது. அது சம்பந்தமான பொதுநல வழக்கும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.
திருத்தொண்டர் திருச்சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் 2011 முதல் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்சமயம் கரூர் மாவட்டத்தை பொருத்தவரை, கோயில்களுக்கு சொந்தமான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சொத்துக்களை மீட்க வருவாய்த்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன. நான்கு கோயிலுக்கு உட்பட்ட நிலத்தை எங்கள் நிலம் என்று சொல்பவர்கள் உரிமையியல் நீதிமன்றம் மூலமாகத்தான் தீர்வு காண வேண்டும்.
இங்கு அரசே அவர்களுக்கு ஏஜென்சியாக இருந்து அவர்களிடம் நிலத்தை ஒப்படைத்து இருக்கிறது. இந்த அரசு சட்டத்தியே கேலிக்கூத்தாக்கிவிட்டது. இது வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது என்கிறார்கள்.அடுத்த நடவடிக்கையாக சிறுத்தொண்ட திருச்சபை நிறுவனம் இந்த பட்டா மாறுதலை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள்.
2007- ஆம் ஆண்டு முதல் கோயில் தொடர்பான சொத்துக்களை பதிவுக்கு ஏற்கக் கூடாது என்று சார்-பதிவாளர்களிடம் அறநிலைத்துறை அதிகாரிகள் புகாரளித்திருந்தனர்.
இதனால் கடந்த 19 ஆண்டுகளாக கோயில் சொத்துக்கள் பதிவுக்கு ஏற்கப்படவில்லை.
இனாம் சொத்துக்களை அனுபவிக்க மட்டுமே முடியும் யாருக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற நடைமுறையை இந்த உத்தரவு மூலம் அரசு மீறி இருக்கிறது என்கிறார்கள் ஆன்மிக பக்தர்கள்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது இனாம் நிலங்கள் கோயில் நிலங்களாக கருதப்பட முடியாது.
1965 மற்றும் 67 - ஆம் ஆண்டுகளில், பலருக்கு மாற்றியும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, மனு அளித்த நபர்கள் அந்த வசிப்பது தெரியவந்தது.
அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே தடை நீக்கப்பட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன? என்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்,
தமிழக அரசு தரப்பில் ஜூலை 29 விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

சென்னை கோட்டையில் முதல்வரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சண்முகம் கரூரில் இனாம் நிலங்களை நீண்ட காலமாக வசித்து வந்தவர்களுக்கு வழங்கியதற்குப் பட்டா வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்ததோடு இல்லாமல் இதேபோல் கோயில்களில் உள்ள மற்ற இனாம் நிலங்களையும் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
விளங்கிரும்.

Leave a comment
Upload