
சென்னையில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய ஆளுநர் "தேசிய கல்விக் கொள்கை என்பது காலனித்துவ சிந்தனையில் இருந்து, இந்தியக் கல்வியை விடுவிக்கும் முயற்சி. இதில் திருத்தங்கள் கோரலாம். செயல்படுத்தாமல் இருப்பது சரியல்ல " என்று பேசினார். இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் " தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர வேண்டும் "என்று பேசியிருக்கிறார்.
இதே தேசியக் கொள்கையை, அந்த தேசியக் கொள்கையின் அடிப்படையிலான பிஎம் ஸ்ரீ திட்டத்தை காங்கிரஸ் ஆளும் கேரளாவும், கர்நாடகாவும், தெலுங்கானாவும் ஏற்றுக் கொண்டுள்ளன. மத்திய அரசு பாட திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் பல கட்சிகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புக்கான காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் ஒரு காரணத்தை சொல்கிறது. குறிப்பாக இது இந்திதிணிப்பு என்பது அவர்கள் வாதம். ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு பலமுறை உண்மை இல்லை என்று மறுத்து இருக்கிறது. தேசியக் கொள்கையில் ஏதாவது ஒரு மொழி என்று தான் சொல்லியிருக்கிறது. தவிர ஹிந்தி என்று குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது அவர்கள் கருத்து. தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்களும் முன்னாள் துணைவேந்தர்களும் தேசியக் கல்விக் கொள்கை நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு நல்லது என்று பலமுறை கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆளுநரும் இதை செயல்படுத்துங்கள் ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை மத்திய அரசிடம் சொல்லி திருத்தங்கள் கோரலாம் என்று அறிவுரை தான் சொல்லியிருக்கிறார்.
மாணவர்களின் கல்வியில் அரசியல் வேண்டாம். நடப்பது மக்கள் முதல்வர் விஜய் ஆட்சி. செய்வார்களா ???

Leave a comment
Upload