தொடர்கள்
அரசியல்
மஹா மொழிப் பிரச்சனை – பால்கி

20250610110013384.jpg

[பயந்தர் மீரா ரோட் ஏரியாவில் பதட்டம்]

கர்நாடகாவில் கன்னடா பேசத் தெரியாத வங்கி ஊழியரை தாக்கிய தாக்குதலுக்கு ஆதரவாய் பாரதீய ஜனதா கட்சியினரும் தொழிலதிபர்களும் பேசியிருந்தனர்.

தேர்தல் என வந்துவிட்டால் அரசியல் கட்சிகளுக்கு இது லட்டு மாதிரி. குழம்பியிருக்கும் தண்ணீரில் மீன் பிடிப்பது மாதிரி.

மும்பையில் அடுத்து வர இருக்கும் மும்பை முனிசிபல் தேர்தலில் ஆதாயம் தேட மஹாராஷ்ட்ரா நவ்னிர்மாண் சேனா (MNS) முனைந்துள்ளது.தாக்கரேக்குப் பின்னர் முறிந்து போன சித்தப்பா மகர் ராஜ் தாக்கரே

20250610110551664.jpg

பாலாசாஹேப்பின் மகர் உத்தவ் தாக்கரேயுடன் காய் விட்டுவிட்டு ஷிவ் சேனா என்ற தாய் கட்சியை விட்டு விலகி MNS என்ற கட்சியைத் தொடங்கினார்.

சொல்லப்போனால், பெருசு இருந்த போதே உத்தவ் மந்தமாகத் தான் இருந்தார், ராஜ் தாக்கரேவை ஒப்பிடுகையில். ஆனால் நடந்ததோ வாரிசு அரசியல் முறைப்படி உத்தவ் அரியணை ஏற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது மகர் அதித்ய தாக்கரே சமயோசிதமாய் ஆரம்பத்திலிருந்தே ஆரவாரத்தில் இருந்து வருகிறார்.

சரி, நம்ம கதாநாயகர் ராஜ்ஜுக்கு வருவோம்.

லட்டு மாறி மொழிப்பிரச்சினை தட்டில் இருக்க, அவரது விசுவாச உடன் பிறப்புக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.

இது பற்றி நான் நமது விகடகவியின் ஏப்ரல் 5, 2025 இதழில் எழுதியிருந்தேன். இதோ கீழே அந்த லிங்க்.

"மராட்டி பேசத் தெரியாதவர்களை அறைய வேண்டும்" – ராஜ் தாக்கரே – மும்பையிலும் மொழி பிரச்சினை . - பால்கி

https://www.vikatakavi.in/magazines/418/14237/MNS-call-to-slap-people-who-do-not-speak-Marathi.php

அத்து மீறி கடைகள், வங்கிகள், சொசைடி வாச்மேன்கள் பானிபூரி சாட் விற்கும் வட இந்தியர்கள் என அவர்களது ஒண்ணர டன் வலது கைக்கு இலக்காகினர். இதில், டர்ன் போட்டுக்கொண்டு புடைப்பது. அந்த தாக்குதல்களை வீடியோ எடுத்து பரப்புவது கொடுமையிலும் கொடுமை. அதற்கு ஆதரவும் உண்டு, எதிர்ப்புகளும் லட்சக்கணக்கில் உண்டு.

இப்போது மும்மொழிக்கொள்கை தகறாரு. ஹிந்தியை கட்டாய மொழியாக்காதே என்ற தொனியில் தகறாரு வலுக்க அரசும் ஹிந்தியை மூன்றாம் மொழியாக்கும் இரு அரசு ஆணைகளை வாபஸ் வாங்கிக்கொண்டு விட்டது. ஆளும் கூட்டணிக்கும் தங்களது அரசியல் பலத்தை இழக்க விரும்பாதது இயற்கை தானே.

இருந்தும் MNSன் ஆட்டம் தீர்ந்த பாடில்லை. தற்போது, MNS எடுத்துள்ள தலைப்பு, “பொது வாழ்வில் மராத்திக்கு எதிராக இந்தி மொழியின் முதன்மை”.

சமீபத்தில் ஒரு உணவக உரிமையாளரை மராத்தி பேசத்தெரியாததால் கன்னம் சிவக்க சூழ்ந்திருந்த MNS உடன் பிறப்புகள் தங்கள் கரங்களைச் சிவக்க வைத்தனர்.

இதை எதிர்த்து வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு பேரணி ஒன்றை செய்தனர்.

அதற்கு எதிராக MNS எடுத்த பேரணியின் போது அதன் தலைவர்களை கைது செய்தது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

2025061011124094.jpg

உங்களது பேரணிக்கு போலீசின் அனுமதி பெற்ற ரூட்டுகளில் அனுமதியுடன் போயிருந்தால் நலமாயிருந்திருக்கும். ஆனால் நீங்கள் எடுத்த ரூட்டோ டிராஃபிக் ஜாம் மற்றும் மக்கள் கூட்டக் கட்டுப்பாடு போன்றவற்றில் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கிவிட்டன. ஆதலால் கைதுகள் தவிர்க்க முடியாததாக போய்விட்டது என்று கூறுகிறார் முதல்வர் ஃபட்னவிஸ். போலீஸ் மாற்று ரூட்டை காண்பித்தும் அடமண்டாக இருந்ததால் MNSன் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தொடர்கிறார்.

மராட்டிய மக்கள் மிகவும் பெரிய மனது படைத்தவர்கள், சத்திரபதி சிவாஜியும் நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம் என்று சொல்லியிருக்கையில் இந்த பிரிவினை வாத அஜெண்டா இங்கு வேலைக்காகாது என்று பளிச்சென சொல்லிவிட்டார் ஃபட்னவிஸ்.

இதற்கு நடுவில், மராத்தி பேசாதவரை செவிட்டில் அறையுங்கள், ஆனால் அதை வீடியோ எடுத்துவிடாதீர்கள் என்ற ராஜ் தாக்கரேயின் உசுப்பல் பரப்புரைக்கு, பாரதீய ஜனதாவின் எம்பி நிஷிகாந்த் துபே,

20250610111311962.jpg

ஹிந்தி தெரிந்தவர்கள் மீது கை வைப்பவர்களே! உருது பேசுபவர்கள் மீது கை வைத்து தான் பாருங்களேன். வீட்டுல நாய் கூட புலி தான். இதுல யார் புலி யார் நாய் என்று நீயே தெரிந்து கொள். உருத் தெரியாமல் போய்விடுவீர்கள் என்று இங்குள்ள மராத்தியரல்லாதோர்க்கு பரிந்து இந்த பகீர் பகிரலை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வடக்கே இருந்து, “ நாடென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? என்ற பிரஷாந்த் கிஷோரின்

20250610111542523.jpg

வடக்கிலிருந்து அரசியல் பிரிவுகளையும் தாண்டி இணைந்த குரலில் ராஜ் தாக்கரேவை எதிர்த்து கடுமையான குரல் இடி போலே வருகிறது.