தொடர்கள்
வலையங்கம்
இதுவல்ல ஜனநாயகம்

20260113184416388.jpg

20260113184438925.jpg

பாராளுமன்றம் முடக்கப்படாமல் அமைதியாக நடந்தாலே அதுவே தலைப்புச் செய்தி என்ற அளவுக்கு சமீப காலமாக பாராளுமன்ற நடைமுறை மாறி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் தேவையில்லாமல் ஏதாவது ஒரு பிரச்சினை எழுப்பி அவை நடவடிக்கையை முடக்க பார்க்கிறது.

இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டம் ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடந்து. அதற்கு பிரதமர் பதில் சொல்வது பாராளுமன்ற நடைமுறை. ஆனால், இந்த முறை பிரதமர் பதில் சொல்லாமலே ஜனாதிபதி உரை மீதான விவாதம் நிறைவு பெற்றது.

காரணம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக பெண் உறுப்பினர்களால் பிரதமருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் நான்தான் அவரை அவைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லா சபையில் அறிவித்தார். பாராளுமன்ற விவகார அமைச்சர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் இருக்கைக்கு அருகில் வந்து எல்லோரையும் காங்கிரஸ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாருங்கள் என்று அழைக்கும் வீடியோவையும் வெளியிட்டார். நல்ல வேளை அப்போது பிரதமர் வரவில்லை .பிரதமர் வந்திருந்தால் சபாநாயகர் சொன்னது உண்மையில் நடந்திருந்தாலும் நடந்திருக்கும் என்பதைத்தான் அந்த வீடியோ வெளிக்காட்டுகிறது.

பாராளுமன்றம் என்பது மக்கள் பிரச்சனையை விவாதிக்க கூடிய ஆக்கபூர்வமான ஒரு மக்கள் மன்றம் என்பதை எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்போது தெரிந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இது ஆரோக்கியமான நடைமுறை அல்ல.