தொடர்கள்
அரசியல்
தேர்தல் திருவிழா- கண்ணாழ்வார்.

20260226173201337.jpeg

திமுக 6 நாள் நடந்த நேர்காணலில் 16500 பேரிடம் விருப்பமனு அளித்தவர்களை ஸ்டாலின் இண்டர்வியூ செய்தார்.

தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் அறிவிப்பதற்குள்....அறிவாலயத்தில் கிட்டதட்ட விக்ரமாதித்தன் வேதாளம் சுமந்த கதையாக மாறிவிட்டது.

20260226173229988.jpeg

திமுக 175 தொகுதிகளிலும் , அதிமுக 169 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளது.

ஆளும் திமுக மந்திரிகளுக்கு எதிராக அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தாமல் கூட்டணி கட்சியினருக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டது.

20260226173253304.jpeg

கமல்ஹசன் கட்சி இந்த தேர்தலில் நிற்காது, திமுக கூட்டணிக்கு வேலை செய்யும் என்று அறிவித்துவிட்டார்.

திருமாவளவன் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றவருக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டது.

ஜி.கே. வாசன் 5 தொகுதிகள் என பங்கீடு முடிந்து தாமரை சின்னத்தில் நிற்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது.

20260226173426202.jpeg

அதிமுக ரேசன் அட்டைக்கு ஒரு ப்ரிட்ஜ், இலவசமாக 3 வீட்டு உபயோக சிலிண்டர் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக விஜயம் குறித்து அறிவிப்பு வெளியிட தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

20260226173603817.jpeg

ஜோசப் விஜய் பெரம்பூர் ,புஸ்ஸி ஆனந்த தியாகராய நகர், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் நிற்க தீர்மானித்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதிமுகவில் இருக்கும் 20 ஸ்டார் பேச்சாளர்களுக்கும் கட்சி பணம் வழங்காது, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அழைத்தால் மேடை கூட்டத்திற்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டது தலைமை. எல்லாம் சமுக வலைதளம் வந்த பிறகு தேர்தல் நேரத்து மேடை பேச்சு கேட்கும் ட்ராண்ட் போய் விட்டதே காரணம்.

அமெரிக்க இஸ்ரேல் ஈரான் போரால் கேஸ் சிலிண்டர் தட்டுபாடு பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்ற நிலை உள்ளது.

20260226175328388.jpeg

எடப்பாடி தனது கூட்டணி வேட்பாளருடன் மைலாப்பூரில் தேர்தல்பிரசாத்தினை துவக்கிவிட்டார்.

வரும் வாரத்தில் சுணக்கமாக இருக்கும் தேர்தல் திருவிழா வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கொஞ்சம் சூடுபிடிக்கலாம்.

விட்டமின் ப வை எதிர்பார்த்து திருவாளர் வாக்களர்கள் காத்து இருக்கின்றனர்.

தென்மாவட்டங்களில் கிடா வெட்டி கறி சோறு என்று பிரதான கட்சிகள் விருந்து மட்டும் நடந்து வருகிறது என்று தகவல்.அதில் கரூர் தொகுதியில் திமுக சார்பாக 120 வார்டுகளில் 120 மனிதபட்டிகள் அதாவது ஏசி வசதியுடன் ஷெட் அமைக்கப்பட்டு கன ஜோராக ஆடு , கோழி குழம்பு என சமையல் நடைபெறுகிறது. இதில் அமர 50 ஆயிரம் மேற்பட்ட சேர்கள் நாற்காலிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. யாராவது தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிதால் அடுத்த சில நொடிகளில் அது ஹோட்டல் என்ற பெயர் பலகைதொங்குகிறது என்று அதிமுக எம்பி இன்பத்துரை ,முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புகார் மனுவினையும் புகைப்படங்களையும் அளித்தனர்.

சட்டமன்ற தேர்தல் நூலிழையில் தான் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு இருக்கும் தகவல்களால் கடைசி நேரத்தில் வாக்களர்களுக்கு அள்ளி கொடுக்க அரசியல் வாதிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை தொந்தரவு தான் தற்போது தமிழகம் முழவதும் பொதுமக்களின் சாபத்தினை பெற்று வருகிறது.

தமிழக மக்கள் இன்னும் தங்களின் ஓட்டு யாருக்கு என்று தெரிவிக்காமல் அரசியல் கட்சியினரை குழப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் இந்த தேர்தலில் பெருமளவில் வாக்களித்தால் பிரதான கட்சிகளின் வெற்றி நூலிழையில் பறிபோகும் என்ற உளவு துறை ரிப்போர்ட் வேறு சென்றுள்ளது.

பாராளுமன்றத்தில் 816 எம்பிக்கள் என புதிய மசோதாவினை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு 39 லிருந்து 59 எம்பி தொகுதி மறுவரையில் உயர்த்தப்படும்.

2026022709262087.jpg

விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியத்தில் பிரேமலதா நிற்க ஆலோசனை.

20260226192320687.jpg

குஷி மூடில் எடப்பாடி ...! அதிமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிட்டு விட்டது.

20260227092737781.jpg

இப்போதைய களநிலவரப்படி தேர்தல் திருவிழா இன்னும் களைகட்டவில்லை.