நீலிமா ராணி

கடந்த 2023-ஆம் ஆண்டு பொன் குமார் இயக்கிய ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்து இருந்தார் நீலிமா ராணி. அது பற்றி கேட்டபோது "இந்த விஷயத்தில் கமலஹாசன் தான் எனக்கு ரோல் மாடல் அவரை மிஞ்சும் அளவிற்கா நான் நடித்து விடப்போகிறேன் "என்கிறார்.
பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன் கவின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
யோகி பாபு

"என் உயரம் என்ன என்பது எனக்கு தெரியும் நான் எப்போதும் காமெடியன் தான்" என்கிறார் யோகி பாபு. அதாவது ஹீரோ வாய்ப்பெல்லாம் வேண்டாமாம்.
ஸ்ருதி ஹாசன்

'பவழமல்லி' பாடலில் தனது குரலை மட்டும் பயன்படுத்திவிட்டு நடிப்பிற்கு காயடுலோஹரை பயன்படுத்தியதால் சாய் அபயங்கரிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாராம் ஸ்ருதி ஹாசன்.
வாரணாசி

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ், சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் வாரணாசி என்ற பான் வேர்ல்ட் படத்தின் முக்கிய காட்சிகளை அண்டார்டிகாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர். அப்படி படமாக்கப்பட்டால் அண்டார்டிகாவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமை இப்படம் பெறும்.
கமலஹாசன்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன் ஆகிய பலரது நடிப்பில் உருவாகி கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தில் யாஸ்கின் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் கமலஹாசன் . இதற்காக அவருக்கு சம்பளம் 150 கோடி பேசப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ்

வெங்கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிக்கிறார்.
அதுல்யா ரவி

சோசியல் மீடியாவில் ஆக்டிவா இருக்கும் அதுல்யா ரவி சமீப காலமாக கிளாமர் சற்று அதிகமாக போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார். பட வாய்ப்புக்காக கிளாமருக்கும் மாறி விட்டீர்களா ? என்று ரசிகர்கள் கமெண்ட் போடுகிறார்கள்.
தயாரிப்பாளர் அஜித்

நடிகர் அஜித்குமார் 'ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி என்ற பெயரில் தென்னிந்திய வர்த்தக சபையில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் செலுத்தி ஆயுள் காலம் உறுப்பினராக பதிவு செய்துள்ளார். நடிகர் அஜித் தயாரிப்பாளர் அஜித் ஆக மாறி இருக்கிறார்.
நயன்தாரா

நடிகை ராதிகாவின் நடிப்பு பயணம் 49 ஆண்டுகள் பூர்த்தி செய்ய உள்ள நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாய் கிழவி திரைப்படம் அவர் திரையுலக பயணத்திற்கு மகுடமாய் அமைந்துள்ளது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் கண்டிப்பா தேசிய விருது பெற்று தரும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவுடன் ஹாய் என்ற படத்தில் நடிக்கிறார் ராதிகா. திரைக்கு வந்து 49 வருடங்கள் நிறைவு செய்த ராதிகாவுக்கு படக்குழுவினர் நடத்திய விழாவில் நடிகை நயன்தாரா ராதிகாவுக்கு கேக் ஊட்டி விட்டு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.
அனுஷ்கா சர்மா

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனா நடிக்கும் படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்க இருக்கிறார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவியாகிய பிறகு 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் அனுஷ்கா சர்மா.
ராஷ்மிகா

ராஷ்மிகாவுக்கு 'தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தில் நடித்ததற்கு தெலுங்கானா அரசின் திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற ராஷ்மிகா கணவருடன் வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர் விஜய் தேவர கொண்ட தாய் மாதவியுடன் வந்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு முதல் யுகாதி பண்டிகை பூஜை முடித்த கையோடு அவர் இந்த விழாவுக்கு வந்திருந்தார்.
அந்த விழாவில் அவர் பேசுகையில் "ஒரு காலத்தில் எனது நடிப்புக்காக பல கேலிகளை சந்தித்தேன். இன்று அதே நடிப்புக்காக மாநில அரசு விருது வென்றுள்ளேன். நான் நீண்ட தூரத்தை கடந்து வந்ததாக உணர்கிறேன் என்றார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமணத்திற்கு பிறகு பெரும் முதல் விருது என்றார். அதற்கு ராஷ்மிகா தனது மாமியார் மாதவியை பார்த்து "உங்கள் அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சாதித்து விட்டேன். இனி நாம் வீட்டுக்குச் சென்று இதை கொண்டாடலாம்" என்றார் .ராஷ்மிகா இந்த பேச்சைக் கேட்டு பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மாமியார் மாதவின் கண்கள் கலங்கிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Leave a comment
Upload