தொடர்கள்
பேரிடர்
போருக்கு  லீவு- கண்ணாழ்வார்.

20260226184438346.jpeg

ஈரான் மீது 5 நாட்களுக்கு போர் நிறுத்தம் மீண்டும் 10 நாட்களுக்கு போர் நிறுத்தம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் ட்ரம்பின் ஈரான் போருக்கு கடும் எதிர்ப்பும், நிறைய அமெரிக்க டாலர் விரையம் ஏற்பட்டதால் விழிபிதுங்கி நிற்கிறார் ட்ராம்ப்.

20260226184507643.jpeg

ஈரான் மீதான போருக்கு தனது பாதுகாப்புச் செயலாளர் (Defence Secretary) தான் காரணம் என ஒரு குண்டை வழக்கம் போல் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

ஈரானுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என ட்ரம்ப் சொல்வதை ஈரான் பலமாக மறுத்து வருகிறது.

20260226184705722.jpeg

அமெரிக்காவிடம் இல்லாத அதிநவீன சூப்பர் சானிக் தாக்குதல் ஏவுகணைகள் அமைப்புகள் ஈரானிடம் இருக்கிறது.

ஈரானிடம் இதுவரை பயன்படுத்தப்படாத பல உயர் தொழில் நுட்ப ஏவுகணைகள் கைவசம் உள்ளது.

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையே அழிக்கும் அதிநவீன தாக்குதல் ஏவுகணை கிடங்குகளை ஈரான் வைத்துள்ளது. எனவே ஈகோ பார்க்காமல் ஈரான் போரை அமெரிக்கா தொடராமல் பேச்சு வார்த்தை செல்வது நல்லது என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சார் அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளிவருகிறது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஈரான் மீது போரால் ட்ரம்பின் இமேஜ் பெருத்தளவில் அமெரிக்காவில் சரிந்துள்ளது.

20260226185415153.jpeg

பலநாடுகளில் எரிவாயு தட்டுபாடு மற்றும் பெட்ரோல் டீசல் , கச்சா எண்ணெய் தட்டுபாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.

20260226185725456.jpeg

ட்ரம்ப் கிட்டதட்ட 23ம் புலிகேசி வடிவேல் மாதிரி ஆகிவிட்டார் என்பதே தற்போதைய டாக் .