தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் சீசன் 19 (2026): முன்னோட்டம் – பால்கி

20260227181752330.jpg

28.3.2026.

2007 ல் முதல் T20 ன் உலகக் கோப்பையை வென்ற ஜோரில் அடுத்த வருஷமே 2008ல் முதல் ஐபிஎல் ஆரம்பித்தது.

இந்த வருடம் இந்த லீகின் 19ஆவது தொடர் இன்றிலிருந்து, மார்ச் 28 ஆரம்பித்து. வரும் மே 31வரை தொடர்கிறது. பத்து டீம்கள் போட்டியிடுகின்றன. 65 நாள் கிரிக்கெட் மேளாதான்.

முன்பிருந்த ரௌண்ட் ராபின் முறையில் தான் மேட்ச்கள் விளையாடப்படுகிறன. ஆனால் ஒவ்வொரு டீமும் மற்ற ஒன்பது டீம்களோடு இரு முறை விளையாடும். இதன் மூலம் மொத்தம் 80 லீக் மேட்ச்சுகளும் 4 ப்ளே ஆஃப் மேட்ச்சுகளும் ஆடப்படுகின்றன. போன வருஷம் 74 மேட்ச்சுகள் தான் ஆடப்பட்டன.

பெங்களூர் உட்பட 13 நகரங்களில் இந்த மேட்சுகள் நடைபெறுகின்றன. பெங்களூரு என்று குறிப்பிட்டு சொன்னதன் காரணம், சென்ற வருடம் நடந்த ஆர்சிபியின் வெற்றி விழா கொண்டாட்டங்களின் போது தெளிவான பாதுகாப்பின்மை காரணமாக அந்த சின்னசாமி மைதானத்தை தடை செய்யப்பட்ட லிஸ்ட்டில் வைத்திருந்தனர்.. இதனாலேயே, வழக்கப்படி ஆடப்பட வேண்டிய ட்ராஃபி வின்னரின் ஊரில் உள்ள மைதானம் என்ற நிலையை மாற்றி ஹைதராபாத்தில் தான் முதல் மேட்ச்சை ஆர்சிபி சன்ரைசர்ஸை எதிர்த்து ஆடுகிறது என்ற செய்தி தான் இரண்டு நாள் முன்பு வரை சுற்றிக்கொண்டிருந்தது.

இந்த 13 மைதானங்களில் சென்னை, மும்பை, கொல்கட்டா, டெல்லி, குஜராத், லக்னௌ அவரவரின் ஒரே நகரின் மைதானத்தையே தனது வீட்டு மேட்சு (home matches)களுக்கு வைத்துக்கொண்டுள்ளன. மற்ற டீம்கள் தனது நகரின் மைதானம் தவிர இன்னொரு நகரின் மைதானத்தியும் தனது வீட்டு மேட்சுகளுக்கு தேர்வு செய்து கொண்டுள்ளனர்.

இது மட்டுமா? அந்த சின்னசாமி மைதானத்தின் மீதான தடை என்ற காரணத்தினால் பெங்களூரு அணி நவி மும்பை மைதானத்தை தனது தாயகமாய் பாவித்து அந்த மைதானத்திலும் சில மேட்சுகளை ராய்பூரிலும் ஆட முடிவு செய்திருந்தது சமீப காலம் வரியிலான செய்தி.

ஆனால் நிலமை வேகமாக மாறலாம்.

போன சீசன் வரையிலான நிலைமை கொண்டு பார்த்தால், பத்தாவது அதாவது கடைசி ரேங்க் வாங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் பெயருக்கேற்றார் போல் மீண்டும் கர்ஜிக்குமா?

கோப்பையை தூக்கியவர்கள்

மும்பையும் சென்னையும் இது வரை ஐந்து முறை ட்ராஃபி ஜெயித்திருக்கின்றன. கொல்கட்டா மூன்று முறையும் பெங்களூரு, ராஜஸ்தான், குஜராத் டைடன்ஸ், சன்ரைசர்ஸ், இன்று இந்த பெயரில் இயங்காத டெக்கான் சார்ஜர்ஸ் தலா ஒரு முறையும் ஜெயித்துள்ளன.

இது வரை ஜெயிக்காத டீம்கள் : இன்றும் ஆடிக்கொண்டிருக்கும் டீம்கள் என்றால் டெல்லி, பஞ்சாப், லக்னௌ, மற்றும் இன்று இயக்கத்தில் இல்லாத குஜராத் லையன்ஸ், புனே வாரியர்ஸ், கொச்சி, ரைசிங்க் புனே சூபர்ஜையன்ட் தான்.

முதலாளி மாறல்

இவை ஒரு புறமிருக்க, ஆர்சிபியை அதித்ய பிர்லா குரூப், டைம்ஸ் ஆஃப் இந்தியா குரூப், போல்ட் வென்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் என்ற குரூப்புகளடங்கிய ஒரு குழுமம் ரூ. 16, 660 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் விஜய் மல்லயா இந்த கிரிக்கெட்டுடனான வணிகத் தொடர்பை துண்டித்துள்ளார். இந்த பட்டுவாடாவில் ஆண்கள் டீம் மட்டுமின்றி பெண்கள் டீமும் விற்கப்பட்டுள்ளது. போற போக்கில், நான் 2008ல ரூ 450 கோடிக்கு வாங்கும்போது சிரிச்சீங்களே! இப்ப பாத்தீங்களா? எவ்வளவு விலைக்கு போயிருக்குன்னு? னு குட்டு வெச்சிருக்கார்.

ராஜஸ்தான் அணியும் ரூ. 15,308 கோடிக்கு அமெரிக்காவின் கல் சோமானி தலைமையிலான குழுமத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதனால், மறைந்த ஷேன் வார்ன்னின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இந்த டீல்களில் பிசிசிஐக்கு ஒவ்வொரு டீலிலும்10% ட்ரான்ஸ்ஃபர் ஃபீஸ் சுளையாக கெடச்சாச்சு.

ஆக, இனி இந்திய ஐபிஎல் டீம் குறைந்த பட்சமாக 1.5 பில்லியன் டாலருக்கு என்ற விலை முறை வந்துவிட்டது.

இந்த வருட தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் நடக்குமா?

சமீபத்திய செய்தி சொல்லுவது என்னவெனில், ஆர்சிபி தனது முதல் மேட்ச்சை பெங்குளூரிலேயே ஆடுகிறது. ஆனால் இந்த டீமின் கடந்த ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டங்களில் நெரிசலால் இறந்த 11 பேர்களின் அஞ்சலியாக இந்த வருட தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் நடக்காது.

20260227182011234.jpg

சஞ்சு சாம்சன எனுக்குக் குடு. நீ ஜடேஜா சாம் கரண வச்சிக்க என்ற உத்தி மாற்றம் இந்த இடை வெளியில் நடந்ததால் சஞ்சு சாம்சன், அதாங்க, சமீபத்தில் முடிந்த T20 உலகக் கோப்பை தொடரில் தொடரின் நாயகானாகவே அறிவிக்கப்பட்ட நம்ம சஞ்சு ஏட்டன் தான் சென்னை டீமுக்கு இனி ஆடப்போகிறார்.

காஸ்ட்லி ப்ளேயர்

இந்த ஐபிஎல்லிலேயே அதிக விலை, ரூ.25.20 கோடி கொடுத்து வாங்கப்பட்டவர் என்றால் அது

20260227182212779.jpg

ஆஸ்த்திரேலியாவின் ஆல்-ரௌண்டர் கேமரான் கிரீன் தான். இருந்தாலும் ரூல் பிரகாரம், ரூ 18 கோடி தான் பச்சையிடம் கொடுப்பாங்களாம். மீதி பிசிசிஐ ப்ளயர் வெல்ஃபேர் ஃபண்ட்டுக்கு போய்விடும் என்பது தான் அந்த புதிய ரூல்.

இந்த அதிக விலை நேஷனல் டீமுக்கு ஆடுறவங்க என்றால் சரி. இங்கப் பாருங்களேன். இந்த முறை நேஷனல் டீமுக்குள் இன்னும் வராமலேயே

20260227182428928.jpg

பிரஷாந்த் வீர்,

20260227182507604.jpg

கார்த்திக் ஷர்மா தலா ரூ.14.20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளனர்.

ரூ 30 லட்சம் என்ற அடி மாட்டு மினிமம் விலையில் சில ப்ளயர்ஸ் இருக்கிறார்கள்.

இந்த நிலையப் பாருங்களேன்.

கடந்த 18 ஆண்டுகளாக இந்தியாவின் பருவங்களில் சம்மர் சீசனை ஐபிஎல் கிரிக்கெட் சீசனாகவே ஆகிவிட்டது. இந்த வருஷம் ஸ்பெஷல் என்றால் தேர்தல்.

உள்நாட்டில் ஐபிஎல்லும் தேர்தலும் என்றால் உலக அரங்கில் மேற்காசிய போர்.

இன்னிக்கி மாலை 7.30 மணிக்கு பெங்களூரில் முதல் மேட்ச் பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே நடக்கிறது.

கேம் ஆன். லெட்ஸ் ப்ளே.

ஏப்ரல் 7 ஆந்தேதி பார்ப்போமா……

பி.கு: சேப்பாக்கத்தில் விசிலுக்குத் தடை 20260227182856679.jpg