தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260227204318695.jpeg

சட்ட சபை தேர்தல் ஏதிரொலி நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க முடிவு.

நல்ல விஷயம்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு.

சூரியன் தயவு இல்லை என்றால் வேலைக்காவாது என்று தெரிந்து கொண்டார்.

தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியில்லை கமலஹாசன் அறிவிப்பு.

டார்ச் லைட்டுக்கு வந்த சோதனை !!

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு 'திருநெல்வேலி அல்வா ' தயாரிப்பு நிறுத்தம்.

பரவாயில்லை விடுங்கள் ஜனங்க தேர்தல் அறிக்கை வைத்து சமாளித்துக் கொள்வார்கள் !!

தொகுதி பங்கீடு மனநிறைவைத் தருகிறதா, திருமாவளவன் விளக்கம்.

வெளில போய் ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல சொன்னாங்க !!

அரிசி கார்டூக்கு இலவச பிரிட்ஜ் எடப்பாடி அறிவிப்பு.

சும்மா ஜில்லுனு இருக்கு !!

கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதி இல்லையா, பிரேமலதா கேள்வி.

அதான் ஒப்பந்தம் கையெழுத்து ஆயிடுச்சு இல்ல, கப்பலே வாங்கலாம் கவலைப்படாதீங்க !!

தமிழகத்தில் பாஜக சூழ்ச்சி வெற்றி பெறாது உதயநிதி ஸ்டாலின்.

வாஸ்தவம் தான் உங்களுக்கு இந்த விஷயத்துல அனுபவம் ஜாஸ்தி !!

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட பெண்கள் இளைஞர்கள் அதிக ஆர்வம்.

கவலையே படாதீங்க உங்க எல்லோருக்கும் இதயத்தில் இடம் நிச்சயம் உண்டு !!

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள்.

விடுங்க தேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கல்லாகட்டிக்கலாம் !!

வேட்பாளர் நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.

இது ஒரு சம்பிரதாய சடங்கு என்ன பண்றது ?

ஐந்து சீட்டுகளே தருவோம் என்னும் திமுகவின் கோரிக்கையை பரிசீவிப்போம் பெ.சண்முகம்.

சீட்டு குறைந்த நிதி குறையும் அதுதான் கவலையாக இருக்கும் !!

இப்போதே பலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் " சசிகலாவுடன் கூட்டணி வைத்த பிறகு ராமதாஸ் அறிவிப்பு.

உங்களுக்கு வயசு ஆயிடுச்சுன்னு ஏற்கனவே உங்க பையன் சொல்லிட்டாரு !!