
'பாகுபலி ', 'காந்தாரா,' 'கே ஜி எஃப் ''ஆர். ஆர்.ஆர் 'புஷ்பா என்று தென்னிந்திய படங்கள் வசூலை குவிக்க அவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்காமல் தவித்துக் கொண்டிருந்தது பாலிவுட் .இத்தனைக்கும் இந்திய திரை உலகின் முகமாக பாலிவுட் இருந்தது.
சினிமாவில் அறிமுகமாகும் பெரும்பாலுமான நடிகர் நடிகைகள் அதுவும் குறிப்பாக நடிகைகள் அடுத்து அவர்களுக்கு நகர்வு ஹிந்தி படமாக தான் இருக்கும்.
அப்படிப்பட்ட பாலிவுட் திரை உலகம் தென்னிந்திய திரைப்படம் சாதனைகளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
பாலிவுட் உலகத்தை தற்சமயம் தூக்கி நிறுத்தி இருக்கிறது துரந்தர் 2 படம். திரையிடப்பட்ட ஏழு நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதித்திருக்கிறது. இதற்கான புகழுக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஆதித்யா தர் .
துரந்தர் படம் அவரது இயக்கத்தில் வெளியாகி 1300 கோடி ரூபாய்க்கு வசூல் செய்து சாதித்தது. துரந்தர் இரண்டாம் பாகம் ஏழு நாட்களிலேயே ஆயிரம் கோடி வசூலை எட்டி இருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் ஆதித்யா தர் இந்திய கிரிக்கெட் அணி விளையாட வாய்ப்பு கிடைக்காததால் வெறுத்துப் போய் சினிமாவுக்கு வந்தவர். டெல்லியில் பிறந்த ஆதித்யதர் காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். இவரது அம்மா சுனிதாதர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கலை பிரிவின் முதல்வர்.
அப்பா விமானப்படை அதிகாரி. அப்பா கற்றுத் தந்த தேசபக்தி அம்மா சொல்லித் தந்த கலை உணர்ச்சி இவை இரண்டும் கலந்து தான் தேசப்பற்றை ஊட்டக்கூடிய படங்களை இயக்கக்கூடிய ஒரு இயக்குனராக அவரால் பரிமளிக்க முடிந்தது.

இன்று இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்று அவரை எல்லோரும் தூக்கிப் பிடித்துக் கொண்டாடினாலும் அவரது கனவு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடுவது தான்என்று இருந்தது. இளம் வயதில் இருந்து கிரிக்கெட்டில் அவர் ஆர்வமாக இருந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அவர் இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்ற முறையில் டெல்லி பல்கலைக்கழக அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்தவர்.
இவரது பந்துவீச்சை பார்த்த இந்திய தேர்வு குழுவினர் அவரை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ப்பதாக கூட வாக்கு தந்தார்கள்.
கிட்டத்தட்ட 2002-ஆம் ஆண்டு 19 வயது உட்பட்டேற்கான உலக கோப்பையில் அவர் ஆட வேண்டியிருந்தது. அவர் தேர்ச்சி உறுதி என்று சொல்லப்பட்டது. கிரிக்கெட்டிலும் அரசியல் அழுத்தங்கள் உண்டு தான்.
இதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னிக்கு போனது .அந்த உலகக்கோப்பையில் ஸ்டூவர்ட் பின்னி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை 34 ரன்களை எடுத்தவர் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார். அதன்பிறகு அணியில் இருந்த சிலர் நீ வந்திருந்தால் கோப்பை வென்றிருப்போம் என்று சொன்னார்கள்.
உலக கோப்பை வாய்ப்பு பறிபோன சோகத்தில் இருந்த ஆதித்யாதர் தனது மனதை திசை திருப்பி சினிமா படங்களை பார்க்க தொடங்கினார்.
படங்களை பார்க்க பார்க்க நாம் ஏன் இயக்குனராக கூடாது? என்று யோசித்து அதே எண்ணத்துடன் மும்பைக்கு வந்தார் ஆதித்யதர். அப்போது பாலிவுட் படங்களை இயக்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷன் அவருக்கு ஆதரவு கரம் நீட்டினார்.
பிரியதர்ஷன் தமிழில் கோபுர வாசலிலே லேசா லேசா போன்ற படங்களை இயக்கியவர். பிரியதர்ஷன் ஆதித்ய தர்ரை தனது உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் .
'ஹெராபெரி',' பூல் புலியா ' ஆகிய படங்களில் பிரியதர்ஷனுடன் பணியாற்றிய பிறகு தனியாக வாய்ப்பு தேடி அலைந்தார் ஆதித்யதர்.
சொல்லப்போனால் ஆதித்யதரின் முதல் படம் 2016-ஆம் ஆண்டிலேயே வந்திருக்க வேண்டியது. அந்தப் படத்தின் பெயர் 'ராத் பாகி ' பாகிஸ்தான் சேர்ந்த பவாத்கான் என்ற நடிகர் நடிப்பதாக இருந்தது. அந்த நேரம் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நடிகர் நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தயாரிப்பாளர் படத்தையே கைவிடுவதாக அறிவித்தார்.
ஆதித்யதரின் முதல் முயற்சியை கைவிட வைத்த உரிதாக்குதல் அவரை சினிமா உலகில் தூக் விட்டது என்கிறார் அவர்.
சம்பவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது.
இந்த சர்ஜிகல் சம்பவத்துக்கு வைத்து படம் எடுத்தால் என்ன என்று யோசித்தார். அந்த யோசனையின் விளைவு தான் அவர் முதல் படம் ' உரிதி சர்ஜிகல் ஸ்ட்ரைக் ' உருவானது. விக்கி கவுஷாலை நாயகனாக கொண்ட இந்தபடம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைத் தேடித் தந்ததுடன் தேசிய அளவில் பல விருதுகளை அவருக்கு வாங்கித் தந்தது.
வாழ்க்கை பாதையில் ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்று சொல்லாடலுக்கு உதாரணம் தான் இயக்குனர் ஆதித்யதர்.
எந்த சூழ்நிலையும் நமது முயற்சியை கைவிடக்கூடாது அடைக்கப்பட்ட கதவை பற்றி யோசிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நாம் முன்னேறினாலே வெற்றி நிச்சயம் என்பதற்கு ஆதித்யதர்ரின் வாழ்க்கையே ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.

Leave a comment
Upload