
5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் இந்த வேலையில் தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் இலவசங்களுக்கு முக்கியத்துவம் தரும் அளவுக்கு வேலைவாய்ப்புக்கு தருவதில்லை.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 'இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 தரவுகள் நாட்டில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. அதுவும் சுமார் 40% பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அந்த தரவுகள் சுட்டிக் காட்டுகிறது. உயர்கல்வி கற்றும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதது அல்லது வேலை சந்தையில் நிலவும் திறன் இடைவெளி போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும் அது மாணவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களுக்கும் தொழில் துறையினருக்கு தேவைப்படும் திறன்களுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம் பாடத்திட்ட சீர்திருத்தத்தின் வேகம் முக்கியத்துவம் பெறாதது தான். பாடத்திட்டத்தின் சீர்திருத்தங்களுக்கே அதை புதுப்பிக்கவே நம் நாட்டில் பல ஆண்டுகள் ஆகின்றன. டிஜிட்டல் பொருளாதாரம் என்பதை நோக்கி நாம் செல்கிறோம் அதற்கேற்ற படி பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆட்சி செய்பவர்கள் கவனம் கொள்ள வேண்டும்.
எனவே இலவசங்களை தள்ளி வைத்துவிட்டு முறையான கல்வியை தொடர் கற்றல் மற்றும் நேரடி பணி அனுபவத்துடன் இணைப்பதன் மூலம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இதுதான் நீண்ட கால வளர்ச்சிக்கான அரிய வாய்ப்பு. இலவசங்களை தவிருங்கள் இது பற்றி யோசியுங்கள்.

Leave a comment
Upload