தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் இதைத்தான் பெண்கள் விரும்புவார்கள்

20260311072737821.jpeg

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பெண்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக உரிமை தொகை பேருந்தில் இலவச பயணம் சிறப்பு கூப்பன், தீபாவளிக்கு பட்டுப்புடவை, பிரிட்ஜ் இப்படி பல இலவச அறிவிப்புகளை போட்டி போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகள் வாரி வழங்கி இருக்கின்றன

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளி மாணவர்கள் பள்ளி மாணவிகள் கூட மதுப்பழக்கத்திற்கு சமீப காலமாக அடிமையாக இருக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் பல குற்ற நிகழ்வுகளுக்கு போதைப் பழக்கம் முக்கிய காரணம் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆனால், தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று சாத்தியம் இல்லாத ஒரு உறுதி மொழியை சொல்கிறார்கள். ஆனால், அதை செயல்படுத்துவது இல்லை. மது வருமானம் தமிழகத்தின் கஜானாவுக்கும் முக்கியம் என்பது தவிர மது விற்பனையில் தான் ஊழல் செய்து சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதால் திராவிட கட்சிகள் மதுவிலக்கு பற்றி யோசிப்பதில்லை.

இளைஞர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் மதுவிலக்கு பற்றி அறிவிக்க வேண்டும். மற்ற எல்லா இலவசங்களை விட பெண்கள் இதைத்தான் அதிகம் விரும்புவார்கள்.