தொடர்கள்
அழகு
தமிழ் புத்தாண்டில் தமிழ் கிராமிய நடனங்களின் அணிவகுப்பு - பால்கி

20260321223239323.jpeg

கடந்த 17 ஏப்ரல் 2026 அன்று மும்பை சண்முகானந்தா சபாவில் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி அந்த சபாவின் மகளிர் அணியினர் நமது தமிழ் கலாச்சாரத்தின் கிராமிய நடனக் கலைகளும் நாட்டுப்புற நடனங்களும் என்ற தலைப்பில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

கரகாட்டம், சிலம்பாட்டம், கோலட்டம், வில்லுப்பாட்டு இன்னும் பல என என்று அழைப்பிதழ் ஈர்த்தது.

தவிர்க்கமுடியாதது.

விழாவில் கலந்துகொண்டு வந்த பின் தான் உணர்ந்தேன் நல்ல காலம் தவற விடவில்லை என்று.

ஏனெனில்,

அத்துணை சிறந்த விழா அது. சபாவின் மகளிர் அணியின் ஏற்பாடு, நடனக்கலைஞர்களோடு ஒருங்கிணைப்பு என அவர்களின் உழைப்பு அன்று அங்கு வந்திருந்த மும்பை வாழ் தமிழ் உள்ளங்களுக்கு ஒரு நல்ல நினைவை விட்டகலாத நிகழ்ச்சியைத் தந்தது.

சபாவின் நாட்டிய கூட மாணவர்கள் மும்பை மாநகரில் உள்ள நடன பயிற்சி பள்ளிகள், SIES போன்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கு கொண்டு அசத்தி விட்டனர்.

பள்ளி கல்லூரி மாணவர்களென நடனக்கலைஞர்கள் இள வயதினரே. கிடைத்த வாய்ப்பை லபக்கென பிடித்துக்கொண்டு கிடைத்த மேடையில் ஒரு கலை விற்பன்னர் போன்றே நிகழ்த்தி கலக்கிவிட்டனர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திருமதி. பத்மாவதி ஸ்ரீநிவாசனின் வர்ணனை நிகழ்ச்சிக்கு ஒரு பக்க பலமாய் அமைந்தது. இடையிடையே தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டிய விஷயத்தில் வினா-விடை போட்டி நடத்தி பார்வையாளருக்கும் பரிசு மழை பெறச்செய்தார்.

இந்த மகத்தான முயற்சிக்கு சபாவின் மகளிர் அணியை மனதார வாழ்த்திடுவோம்.

ஏற்பாட்டாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் என விடுப்பது : -

  1. சிலம்பாட்டம் கரகாட்டம் ஆட வந்த கலைஞர்களுக்கு மேடையின் தாழவான கூரை ஒரு தடைக்கல்லாயிருந்தும் அட்ஜஸ்ட் செய்து ஆடிவிட்டனர். ஆக அடுத்த நிகழ்வின் போது உயரிய கூரை கொடுப்பின், அகலமாக,, கிடைத்த நிலத்தில், எம்பி குதித்து தனது சாஹசங்களை நிகழ்த்திக்காட்டுவார்கள் நிச்சயமாக.
  2. சிலம்பாட்டக்காரர்கள் அந்த ஆட்டத்திற்குரிய பாரம்பரிய உடையில் வந்திருந்தால் இன்னும் களை சேர்ந்திருக்கும்.

இதோ அந்த கிராமிய நடனங்களின் புகைப்பட சுற்றுலா

20260322131131576.jpeg

கணேச வந்தனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.

அடுத்து கல்லூரி மாணவிகள் நால்வரணி வகுத்து வில்லுப்பாட்டு நிகழ்த்த வந்தாங்க. இதுதான் அவர்களது கன்னி முயற்சியாம். கன்னியரின் கன்னி முயற்சி பாராட்டத்தக்கதுதான். தமிழ் புத்தாண்டை வைத்து அவர்கள் அமைத்தது, கிட்டத்தட்ட முன்னேர்பாடின்றி அமைந்தது தான் என்று, அவர்கள் ஒருவருகொருவர் தமது சமயோசிதத்தால் பதிலளித்து நிகழ்வைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு போனதிலிருந்தே தெரிந்தது.

20260322133652278.jpeg

இந்த வில்லுப்பாட்டு கிட்டத்தட்ட 5120 வருஷமா நடக்குன்னு வில்லைத் தட்டும் தலைவி சொன்னதிலிருந்து இது இந்த யுகத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த தமிழரின் கலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிகிறது.

இதோ அடுத்து கும்மியடியாடி வரிகிறார்கள்.

20260322134307744.jpeg

20260322134413906.jpeg

20260322134445659.jpeg

20260322134513854.jpeg

இந்த கும்மியாட்டத்தத் தான் கும்மியடி என்றும் கூறுவார்கள். இதை கேரளத்தில் கைக்கொட்டிக்களி என்பதைத் தான் கொம்மையாட்டம் என்று மருவி தமிழகத்தில் கும்மியாட்டம் ஆனது என்கிறர் தொகுப்பாளர். கும்மியடிகளில் பல வகையுண்டு.

தானானே.. வந்து பாரடி காமட்சி என்ற பாட்டுக்கு கும்மி - கோலாட்டதில் கலக்கினர் குமரிகள் இதோ.

20260322135319729.jpeg

அடுத்து தஞ்சை மண்ணின் அடையாளம் கரகாட்டம் . ஆடல் கரகாட்டத்தை சமீபத்தில் மும்பை கல்லூரிகளுக்கிடையேயான கலைப்போட்டியில் பரிசு வென்ற 2 மாணவ 4 மாணவியர் குழு கலக்கிவிட்டார்கள். பார்வையாளர்களும் கூடவே ... பின்ன என்னங்க...தமிழகத்தின் மாநில பாட்டு தானே, மாங்குயிலே, பூங்குயிலே..தான் அந்த பாட்டு. அந்த பாட்டுக்கு எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கன்னடக்கார தம்பதியரும் தாளம் போட்டபடி...

அருகே பாம்பாட்டத்திற்காக அவர்களது மகள் அமர்ந்திருந்தார். பரத நாட்டிய மாணவி.

20260322140205812.jpg

2026032214034058.jpeg

20260322140434441.jpeg20260322140510806.jpeg

20260322140546960.jpeg

20260322140647458.jpeg

கலாசதன் நாட்டியாலயாவிலிருந்து மயிலாட்டம் ஆட மங்கயர் மூவர் இதோ பின்வருமாறு:-

20260322141001604.jpeg

20260322141103459.jpeg

20260322141130949.jpeg

20260322141155383.jpeg

பாம்பாட்டத்தில் மயக்கினர் மூன்று மாணவிகள். ஆடு பாம்பே, விளையாடு பாம்பே...

20260322141615318.jpg

20260322141655968.jpg

20260322141729553.jpeg

20260322141815626.jpeg

20260322141902444.jpg

20260322141949905.jpgஒவ்வொரு பாவமும் பார்க்கும் போது, னடனக் கலைஞர்கள் முழு மனதுடன் இயங்கியிருக்கின்றனர் என்பது பார்த்தவர்க்குத் தெரியும். இப்போது படிப்பவர்க்கும் புரியும்.

அடுத்து வந்தது காவடியாட்டம்.

அகஸ்தியர், இடும்பனை, சிவ கிரி சக்தி கிரி எனும் இரு மலைகளையும் கோலின் நுனியில் கட்டி தூக்கி வரச் சொல்ல அவனது ஆட்டமே காவடியாட்டமாக நமக்குக் கிடைத்தது.

இதோ அந்த புகைப்படங்கள்

20260322142747483.jpg

20260322142836891.jpeg

20260322142925564.jpeg

20260322143003357.jpeg

சபாவின் நாட்டியாலயா மாணவியர்கள் சக்தி கரகாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் ஒருங்கே இணைத்து வழங்கினர்.

20260322143259537.jpeg

20260322143349471.jpeg

20260322143436413.jpeg

20260322143518935.jpeg

சண்முகானந்தா சபா தமிழர் தினங்களையும், இயல் இசை நாடகமென கலைகளையும், கலைஞர்களைக் கொண்டாடுவதில் சளைப்பதில்லை. அவர்களது கொண்டாட்டங்களில் இந்தியாவின் முழுவதுமான கலைகளும் அடங்கும் என்பது அரிய பொக்கிஷமாகும்.

சண்முகானந்தா சபா ஒரு அகில இந்திய பல்கலைக்கழகம்.