
வாரம் நான்கில் நடந்த 32 மேட்சுகளின் முடிவில் … நடந்தவை
மேட்ச் 32 ராஜஸ்தான் Vs லக்னௌ மேட்ச்சில் ராஜஸ்தான் முதலில் ஆடி எடுத்ததென்னமோ 159 ரன்கள் தான். அதில் குட்டி பயல் வைபவ் சூரியவாண்ஷி எடுத்த ரன்கள் 8. ஆனால் அந்த ஸ்கோர்லியே இரண்டு சாதனைகள் பலியாயின.

க்ளென் மேக்ஸ்வெல் தான் 260 பந்துகளில் 500 எடுத்தவர் என்பதை முறியடிக்கும் விதமாக வைபவ் 227 பந்துகளிலேயே 500 ரன்களை எடுத்துவிட்டார். இது மட்டுமா? இவர் தான் தனது 15 வயதிற்குள்ளேயே 500 ரன்கள் எடுத்த இளம் வீரர் ஆனார்.
சமீபத்தில் ஹைதராபாத் Vs சென்னை மேட்ச்சில் போட்டியில் வெற்றிக்காக பில்லி சூனியம் வைத்ததாக புகார் பலத்தது. ஹைதராபாத் அணிக்காக அந்த ஊர் ரசிகர் எலுமிச்சம் பழத்துடன் மர்மமான முறையில் சடங்குகள் செய்த வீடியோ வலம் வந்த வண்ணம் இருக்கிறது.

முன்னாள் ஐபிஎல்லின் தலைவர் லலித் மோதியும், இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில், இந்த மாதிரி அவரது காலத்தில் ஒரு அணியின் உரிமையாளர் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
நம்ம்ம்ம்ம்பித்தான் ஆகணும். முதல் ஐந்து போட்டிகளில் மும்பை இண்டியன்ஸில் ஆடிய உலகின் முதன்மை வேகப் பந்து வீச்சாளர்

பும்ரா ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. ஆறாம் மேட்ச்சில் குஜராத்துடனான மேட்ச்சில் தான் முதல் விக்கெட் எடுத்தார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 19 சீசனில் குஜராத அணிக்காக ஆடிவரும் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், இந்திய மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து வந்த தத்தம் நாட்டுக் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்ற அழைப்பை ஏற்கவில்லை. எனக்கு என் நாடு தான் முக்க்கியம் என்றிருக்கிறார். தேச பக்தர்.
இவ்வளவு வெற்றிகரமான நிலையில் ஐபிஎல் சீசன்19 நடந்துகொண்டிருக்கையில் ETPL – ஐரோப்பிய T20 வரும் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை ஆறு அணிகள் கலந்துகொள்ளும் தொடராரம்பமாகிறதாம். 33 மேட்ச்சுகள் இருக்கும்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் வாக், க்ளென் மேக்ஸ்வெல் தலா ஒரு அணிகளை வாங்கியுள்ளனர். ஒரு அணியின் இணை உரிமையாளராகியுள்ளார் அபிஷேக் பச்சன்.

இன்று வரை ஆடிய ஆறு மேட்ச்சுகளில் பஞ்சாப் அணி ஐந்தை வென்று எஞ்சிய மேட்சை மழை காரணமாக ஆடமுடியாமல் போக கொல்கட்டாவுடன் தலா ஒரு பாயிண்டை பெற்றதன் மூலம் 11 பாயிண்ட்டுகள் பெற்று அசத்தலான முதலிடத்தில் உள்ளது.
அப்படி என்ன பண்ணியிருக்கு ஷ்ரேயாஸ் அய்யரின் பஞ்சாம் என்றால், ஆடும் வீரர்கள் இது வரை மாற்றப்படவில்லை, பயமறியா அதிரடி ஆட்டம், பேட்டிங்க் பௌலிங்க் ஃபீல்டிங்க் துறைகளில் குறையின்மை, அய்யரின் தலைமை என்று சொல்லலாம் கண்ணை மூடிக்கொண்டு.

இந்த அணி தான் இது வரையிலான ஐபிஎல் வரலாற்றில் ஆடிய முதல் ஆறு மேட்ச்சுகளில் தோல்வியே சந்திக்கவில்லை.
கொல்கட்டாவின் வருண் சக்கரவர்த்தி T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை அதி வேகமாக வீழ்த்திய இந்திய ஸ்பின் பௌலர் ஆவார். அவர் எடுத்த 200 ஆவது விக்கெட் வைபவ் சூரியவாண்ஷியுடைதாகும்.

கொல்கட்டா ஏழு மேட்ச்சுகளில் ஐந்து தோல்விகளைக்கொண்டு 3 பாயிண்டுகளுடன் கடைசி ரேங்கில் இருக்கிறது.
இந்த தொடரில் இந்த வார இறுதி வரை (32 மேட்ச் முடிவில்)
323 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப் பெற்றிருக்கும் பேட்ஸ்மன் ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மா.

13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் (ஊதா கலர்) கேப் பெற்றிருக்கும் பௌலர் லக்னௌ அணியின் ப்ரின்ஸ் யாதவ்.


Leave a comment
Upload