தொடர்கள்
தேர்தல்
தேர்தல் முடிவுகள் - ஸ்வேதா அப்புதாஸ்

அடுத்த தமிழக முதல்வர் பரபரப்பில் தமிழகம் காத்திருக்கிறது.

20260330221924979.jpeg

இளம் வாக்காளர்கள் ஓட்டு போட தீர்மானித்தது ஆச்சரியமான ஒன்று.

20260330222018850.jpeg
பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நூறு சதவிகித இலக்கை நோக்கி போராடி பாடம் எடுத்து கொண்டிருந்த ஆசிரியர்களை ….எஸ் ஐ ஆர் பணிக்கு பி எல் ஓ வாக வலுக்கட்டாயமாக இழுத்து அடிமைகள் போல வேலை வாங்கியது.

பூத் சிலிப் வீடு வீடாக சென்று கொடுக்க வைத்தது….

தேர்தல் அன்று வாக்குசாவடி அருகில் நிற்க வைத்து உன்னதமான ஆசிரியர் பணியை கேவலப்படுத்தியதை …ஆசிரியர்கள் வேதனையுடன் வாக்குசவடிக்கு சென்று ஒட்டு யாருக்கு போட்டனர் என்பது மிக பெரிய கேள்விக்குறி தான் .

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் தேர்தல் வந்து விட்டது.

போராட்டதில் ஈடுபட்ட ஆசிரியர்களை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று வழக்கு போட்டு துன்புறுத்தியதை மறந்து விட்டு எப்படி ஆளும் கட்சிக்கு ஓட்டு போடமுடியும் என்று ஆவேசமாக கூறுகிறார் ஒரு ஆசிரியை.

விகடகவிக்காக நாம் சிலரை சந்தித்தோம்.

20260330222053595.jpeg
ஊட்டி பிரகாஷ் கூறும் போது, “ இந்த தேர்தல் முடிவுகள் முன்பு இருந்தது போல இருக்காது என்று நினைகிறேன். ஓட்டே போடாத ஏராளமான இளைஞர்கள் வாக்குசாவடிக்கு வந்தது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரிகிறது.

மே 4 அன்று தமிழகம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைகிறேன் “-.
கோவை அருள் குமார்,

20260330222125506.jpeg

“ இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் தாங்களே முன் வந்து வாக்களித்தது பாராட்டுக்குரியது காரணம் ஒரு மாற்றதை எதிர்பாத்து தான்.
ஆட்சியாளர்கள் கொடுத்து இலவசங்களை பார்த்து வெறுப்பு தான் ஒரு மாற்றம் வரும் பார்போம்” என்கிறார்.


மேட்டூர் மேகலா கூறுகிறார்,”மக்கள் ஏதாவது ஒரு மாற்றதை எதிர்பார்க்கிறார்கள்.

20260330222347505.jpeg
முக்கியமாக இளைஞர்கள் ஒரே மாதிரியான போக்கு இல்லாமல் ஒரு மாற்றம் வேண்டும் என்று புதுமையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்த போகிறது “.


மேட்டூர் கொளத்துறை தனலட்சுமி கூறுகிறார்

2026033022261829.jpeg

"பதினெட்டு வயது கடந்த புதிய வாக்காளர்கள் தாங்களாகவே முன் வந்த இன்றஸ்டாக ஓட்டு போட்டிருகிறார்கள் தங்களின் பெயர் ஓட்டர் லிஸ்டில் சேர்த்து ஆவலுடன் ஓட்டு போட்டது ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தான் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம் “.


ஊட்டி மார்க்கெட் வியாபாரி சிராஜுதீன் கூறுகையில்.

2026033022301465.jpeg
“வரக்கூடிய தேர்தல் முடிவில் தி மு க பிடித்து முழு மெஜாரிட்டியில் ஆட்சியை பிடிக்கும் . இளைஞர்களின் வாக்குகள் த வே கவிற்கு போகும்.